என்ன செய்வது? போராளிகள் கொன்று விட்டுப் பழியைச் சிங்களப் படைமீது சுமத்துகிறார்கள் என இப்போது சொல்ல முடியாது. இப்படித்தானே சொல்ல வேண்டும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, ஜன. 23: தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கழுத்தை நெரித்து கொன்றதாக வெளியாகியுள்ள தகவலை அந்த நாட்டு கடற்படை மறுத்துள்ளது. நாகை மாவட்டம் புஷ்பவனத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கழுத்தை நெரித்து கொன்று விட்டனர் என்று கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடந்த 12-ம் தேதி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதற்றம் தணிவதற்குள் மீண்டும் இந்த படுகொலை நிகழ்ந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் அதுலா சேனாரத இது குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களது கடற்படையினர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது அடிப்படையற்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள எங்களது கடற்படையினரை நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக