கலைகளை வளர்ப்பதையும் கலைஞர்களைப் போற்றுவதையும் அரசின் கடமையாகக் கருத வேண்டும். அதே நேரம் அறிஞர்களையும் அரசு மதிக்க வேண்டும். எனவே, விருதுகள் வழங்கப்படுகின்றமையைக் கேலியாகக் கருதக் கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.25: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி. சங்கர், நடிகர் ராஜசேகர், தமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இத்தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு 2007ஆம் ஆண்டுக்கான 7 விண்ணப்பங்களும், 2008 ஆம் ஆண்டுக்கான 12 விண்ணப்பங்களும் ஆக வரப்பெற்ற மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களைக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின்படி முதல்வர் கருணாநிதி விருதுக்குரிய தொடர்கள், மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார். அதன் விவரம்:2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள்சிறந்த நெடுந்தொடர் 1. சிறந்த நெடுந்தொடர் - முதல் பரிசு கோலங்கள்(விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ. 2 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். 2. சிறந்த நெடுந்தொடர்- இரண்டாம் பரிசு லட்சுமி(ஹோம் மூவி மேக்கர்ஸ்) ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். சிறந்த சாதனையாளர் விருது. 1. ஆண்டின் சிறந்தசாதனையாளர் ராதிகா ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். 2. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் வி.எஸ். ராகவன் ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களுக்கான விருதுகள். 1. சிறந்த கதாநாயகன் விஜய் ஆதிராஜ்(லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 2. சிறந்த கதாநாயகி தேவயானி(கோலங்கள்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 3. சிறந்த குணச்சித்திர நடிகர் பிருத்விராஜ்(அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 4. சிறந்த குணச்சித்திர நடிகை சத்யபிரியா(கோலங்கள்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 5. சிறந்த வில்லன் நடிகர் ராஜ்காந்த்(மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 6. சிறந்த வில்லி நடிகை நளினி(பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 7. சிறந்த குழந்தை நட்சத்திரம் நிவேதா(அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 8. சிறந்த இயக்குநர் சுந்தர் கே. விஜயன்(லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 9. சிறந்த கதையாசிரியர் அறிவானந்தம்(அகமும் புறமும்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 10. சிறந்த திரைக்கதை ஆசிரியர் முத்துசெல்வம்(மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 11. சிறந்த உரையாடல் ஆசிரியர் பாஸ்கர் சக்தி(மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 12. சிறந்த ஒளிப்பதிவாளர் வசீகரன்(அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 13. சிறந்த படத் தொகுப்பாளர் ரமேஷ்(அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ். 14. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ரேகான்(பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ். 15. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) மதி(லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ். 16. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) நித்யா (பாசம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்சிறந்த நெடுந்தொடர் 1. சிறந்த நெடுந்தொடர் - முதல் பரிசு ஆனந்தம்(சத்யஜோதி பிலிம்ஸ்) ரூ. 2 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். 2. சிறந்த நெடுந்தொடர்- இரண்டாம் பரிசு நம்ம குடும்பம்(எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்) ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். சிறந்த சாதனையாளர் விருது. 1. ஆண்டின் சிறந்தசாதனையாளர் வ.கௌதமன் ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். 2. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் ஒய்.ஜி.மகேந்திரா ரூ. 1 லட்சம் ரொக்கம்,நினைவுப்பரிசு மற்றும்சான்றிதழ். சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களுக்கான விருதுகள். 1 சிறந்த கதாநாயகன் சஞ்சீவ்(திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 2 சிறந்த கதாநாயகி சுகன்யா(ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 3 சிறந்த குணச்சித்திர நடிகர் மோகன் வி.ராமன்(வைர நெஞ்சம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 4 சிறந்த குணச்சித்திர நடிகை அனுராதா கிருஷ்ணமூர்த்தி (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 5 சிறந்த வில்லன் நடிகர் சாக்ஷி சிவா(நம்ம குடும்பம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 6 சிறந்த வில்லி நடிகை மாளவிகா (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 7 சிறந்த குழந்தை நட்சத்திரம் மோனிகா (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 8 சிறந்த இயக்குநர் செய்யாறு ரவி(ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 9 சிறந்த கதையாசிரியர் குமரன்(திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ். 10 சிறந்த திரைக்கதை ஆசிரியர் அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ்(திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 11 சிறந்த உரையாடல்ஆசிரியர் லியாகத் அலிகான்(அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 12 சிறந்த ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன்(சிவசக்தி) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 13 சிறந்த படத் தொகுப்பாளர் ராஜீ(மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 14 சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ஆதித்யன்(சந்தனக்காடு) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 15 சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) சங்கர்(பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ். 16 சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) அனுராதா(தவம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,நினைவுப் பரிசு மற்றும்சான்றிதழ்.
கருத்துகள்
What are the good things happen in the society by these people.? This government must explain.... What they are thinking about us.? These serials merely are wasting the time of home making women.. This is already a open secret... The common man asks to stop these serials..
By thiyagu
1/25/2011 10:38:00 PM
1/25/2011 10:38:00 PM
அப்பாவி தமிழனின் ஆதங்கம் புரிகிறது. கூத்தாடிகளின் ஆட்சி தான் தமிழனுடைய விதி என்றாகிவிட்ட பிறகு ஆதங்கப்பட்டு என்ன பிரயோசனம்? இதை 1967 ல் உணர்ந்திருக்க வேண்டும். தவறு செய்து விட்டோம். இப்பொழுது வருந்தி என்ன செய்வது.
By Ramakrishnan
1/25/2011 8:01:00 PM
1/25/2011 8:01:00 PM
Stupid scheme
By joy
1/25/2011 6:54:00 PM
1/25/2011 6:54:00 PM
அரசாங்கத்தின் இவ்வளவு பணத்தை எதர்க்கு இப்படி விரையம் பன்ன வேண்டும். உலகளவில் இப்படி பட்ட புரொக்ராம் எல்லாம் ஏதாவது ஸ்பான்சர்கள் தான் செய்வார்கள். அரசாங்கம் அல்ல. இந்த முக சினிமாவை தவிர வேறேதும் நினைப்பது இல்லை. யாராவது சினிமாவிர்க்கு வரி விலக்கு கொடுப்பங்களா ?. முக அப்படி செய்வார் யாரும் எதிர்க்க மாட்டார்கள் ஏனென்றால் எதிர்கட்சி, மற்றகட்சிகள் எல்லோரும் சினிமா சார்ந்தவர்கள். முக இந்த பணத்தை கல்விக்கு செலவு செய்தால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கலாம். முகவை பொருத்த வரைக்கும் நல்ல சந்ததி என்றால் கூத்தாடிகள் ஆவது.
By அப்பாவி தமிழன்
1/25/2011 6:00:00 PM
1/25/2011 6:00:00 PM