தாய் மொழி வளர்ச்சிக்கு வித்திடும் கேரள அரசிற்குப் பாராட்டுகள். ஆனால், அங்கே யாரும் வழக்கு போட்டுக் குறுக்கே நிற்கமாட்டார்கள். எனவே, கேரள மக்களுக்கும் பாராட்டுகள்.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
திருவனந்தபுரம், ஜன.25: பள்ளிகளில் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்துக்கு கேரள அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.கேரள பள்ளிகள் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக ஆர்.வி.ஜி. மேனன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.இன்று நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், "இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மாநில கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொள்ளும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக