சனி, 29 ஜனவரி, 2011

fishermen killing: niruba goes to ilangai: தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்


அவர்  பேசும் பொழுதே படுகொலை தொடரும். கொன்றது யார் எனத் தெரியவில்லை என்பார்கள். வந்த பின்னும் தொடரும். எதற்குத்தான் பேச போகிறார்களோ தெரியவில்லை. சிங்களன் அடிபட்டதற்கே அலறுகிறான் அவன். கொடுரமாக் கொள்ளப்பட்டாலும்  வேடிக்கை பார்க்கும் நம் அரசுகள். என்ன கொடுமையட இது. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
 
 
தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்

First Published : 29 Jan 2011 12:51:07 AM IST


புது தில்லி, ஜன. 28: தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை அரசுடன் விவாதிக்க வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.  கடந்த இரண்டு வார காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களில் இரண்டு பேர் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர்.  புதுக்கோட்டை ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் ஜனவரி 12-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.  கோடியக்கரைப் பகுதியில் ஜனவரி 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரை கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று மாட்டி கடலில் தள்ளியதில் அவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.  இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.  இப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஓரிரு நாள்களாக பல்வேறு மீனவர் அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவை இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளதாக அந்தத் துறை அதிகாரி ஒருவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக