தமிழறிஞருக்கு விருது வழங்கப் பரிந்துரைத்த தமிழக அரசிற்கும் ஏற்ற விருதாளர் தெரிவுக் குழுவிற்கும் ஒப்புக்கொண்ட மத்திய அரசிற்கும் பாராட்டுதல்கள். நாவேந்தர் ஔவை நடராசனார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன. 25: மூத்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராசன் (75) பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும் பணியை போற்றும் வகையில், 1984-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராக அவரை நியமித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் தமிழக அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதற்குப் பிறகும் யாரும் இவ்வாறு அரசு செயலாளராக நியமிக்கப்பட்டதில்லை.பாமரர்கள் முதல் பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில், தமிழ் இலக்கியத்தின் பெருமையைப் போற்றும் அவரது மேடைப் பேச்சு, அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள அவருக்கு, இப்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக