இதனை வேறு வகையில் பார்க்க வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெரும் என்றால் இப்பொழுது தேர்தல் நடத்துவதால் ஒன்றும் இல்லை. ௨.) தி.மு.க. தோல்வியை தழுவும் என்றால் எதிர்க்கட்சியாக இருக்கும். அப்பொழுது சிறப்பாக செயல்படும். எனவே எதிர்க்கட்சியாக நல்ல முறையில் செயல்பட இப்பொழுது தேர்தல் நடத்துவதால் நல்லதே. ௩.) எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடைமுறை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.28- தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தபின்னர் மேலவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் மேலவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களே மேலவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழக சட்ட மேலவையில் மொத்தம் உள்ள 78 உறுப்பினர்களில் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மூலம் 26 பேரும் உள்ளாட்சிப் பேராளர்களின் மூலம் 26 பேர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேரை ஆளுநர் நியமிப்பார். மீதமுள்ள 14 பேரில் பட்டதாரி தொகுதிகளிலிருந்து 7 பேரும் ஆசிரியர் தொகுதியிலிருந்து 7 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அதாவது இன்னும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்க இருக்கிற தற்போதைய சட்டமன்றப் பேரவையின் மூலம் 26 பேரும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. எனவே தற்போதைய உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிய இருக்கிறது. அவைகளிலிருந்து 26 பேரும், தற்போதைய தி.மு.க. அமைச்சரவை பரிந்துரை செய்யும் 12 பேர் ஆளுநர் நியமனத்தின் மூலமும் மேலவையில் நுழைய வழிவகுக்கப்படுகிறது. ஆக மொத்தமுள்ள 78 உறுப்பினர்களில் பெரும்பாலோரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வழிவகுக்கவே அவசரக்கோலத்தில் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.புதிய சட்டமன்றம் அமைக்கப்பட்டப் பிறகும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டப் பிறகும் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்தப்படுவதுதான் சரியாக இருக்க முடியும். ஆனால் வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பின்புற வழியில் மேலவையில் புகுந்துகொள்ளும் இந்தச் சதித்திட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக மரபுகளுக்கும் தார்மீக நெறிமுறைகளுக்கும் இது எதிரானது.இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
அன்பன் அவர்களே, நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்! "துரோகிகளா! எதிரிகளா! யாரை ஆதரிப்பது!" என்று! மக்கள் அறிவுப் பூர்வமாக நன்கு சிந்தித்து தெளிவான முடிவெடுத்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த ஆர்வம் காட்டினால் நமது துரோகிகளும் எதிரிகளும் நிச்சயம் மக்களுக்குப் பயந்து தங்கள் மக்கள் விரோத போக்கை மாற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவர்! நடக்குமா! மக்கள் தங்கள் வாக்குகளின் மதிப்பை உணர்ந்து கொள்வார்களா! ... நடக்க வேண்டும்! ... உணர வேண்டும்!
By பொன்மலை ராஜா
1/28/2011 8:52:00 PM
1/28/2011 8:52:00 PM
உள்ளூர் தமிழர்களின் விலைவாசி பிரச்னை வேலை வாய்ப்பின்மை மின்சார பிரச்னை இன்னும் பிற பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராடாமல் இலங்கை பிரச்னை பற்றி மட்டும் பேசி வரும் நெடுமாறன் போன்றவர்கள் மேலவை தேர்தல் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
By ராமசுப்ரமணியன்
1/28/2011 3:59:00 PM
1/28/2011 3:59:00 PM
நெடுமாறன் அவர்களே கங்கிரஸும் , தி.மு.க.வும் மேலவையில் இல்லை என்றால், அ.தி.மு.க. வும் அதன் கூட்டளிகளும்தான் மேலவையில் ஆதிக்கம் செலுத்துவார்கள். முதல் அணியினர் ஈழத்தமிழரின் கொலைக்கு உதவியவர்கள், இரண்டாவது அணியினர் ஈழத் தமிழர்களைக் கொலை செய்யத் தூண்டியவர்கள். இதில் எந்தக் கொள்ளிக் கட்டை சிறந்தது.
By அன்பன்
1/28/2011 3:42:00 PM
1/28/2011 3:42:00 PM