எதற்கு அறிக்கை கேட்கிறது? ஒரு வேளை மூவரையுமே அழித்திருந்தால் சான்று இல்லாமல் போய் இருநதிருக்குமே! ஏன், பிற இருவரை விட்டு வைத்தீர்கள் என்று சிங்கள அரசிடம் கேட்டுச் சொல்லுமாறு கேட்டிருப்பார்களோ! நொடிக்கு நொடி சிங்கள அரசை நட்பு நாடு என்று சொல்லும் இந்தியஎன்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது தெரிந்ததுதான். தமிழ் மக்கள்தாம் இப்படுகொலைகள் நிறுத்தப்பட என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்துக் கட்சிச் சார்பின்றிச் செயல்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 23 Jan 2011 05:30:53 PM IST
First Published : 23 Jan 2011 05:30:53 PM IST

புதுதில்லி, ஜன.23- தமிழக மீனவர் படுகொலைகள் தொடர்பாக அறிக்கை சமப்பிக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தரவின் இந்தியத் தூதரிடம் அறிக்கை கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.நேற்று, கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் என்பவரை இலங்கை கடற்படையினர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மீனவர் படுகொலை தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மேலும், அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை அளிக்குமாறு தமிழக அரசையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்


By T.Selvan,Nellai
1/23/2011 10:52:00 PM
1/23/2011 10:52:00 PM


By T.Selvan,Nellai
1/23/2011 10:41:00 PM
1/23/2011 10:41:00 PM


By திண்டல் சங்கர நாராயணன்
1/23/2011 7:45:00 PM
1/23/2011 7:45:00 PM


By mohan
1/23/2011 6:03:00 PM
1/23/2011 6:03:00 PM