செவ்வாய், 4 மே, 2010

பிரபாகரன் தாயாருக்கு நிபந்தனைகள்: முதல்வர்

First Published : 04 May 2010 05:31:34 AM IST

Last Updated : 04 May 2010 06:08:56 AM IST

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தில்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி -​ அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும்,​​ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து,​​ அரசு சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு,​​ தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக பார்வதி அம்மாளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.அவருடைய பாதுகாப்பு கருதி,​​ அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,​​ அரசு செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியுள்ள நிபந்தனைகள்.இது ஒன்றும் கடுமையானது அல்ல என்று முதல்வர் கூறினார்.
கருத்துக்கள்

இவர்களிடம் சாணக்கியர்கள் பிச்சை எடுக்க வேண்டும். ஒத்துக் கொண்டால் வலிய வந்து வீட்டுச் சிறை போல் மருத்துவமனைச் சிறைவாசிஸ- பாதுகாப்புக் கைதி;இல்லையேல் நாங்கள் இலவசப் பண்டுவத்திற்கு - சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தும் ஒத்துக் கொள்ளவில்லையே என் செய்வது? அப்படியானால் அவர்களின் திட்டம் வேறாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம். பாதுகாப்புக்கைதியாக வந்தால் அவர்கள் பெயரிலேயே கூட்டுக் கொலைகாரர்களைப் புகழ்ந்து அறி்க்கை அளித்துக் கொள்ளலாம். வராவிடில் பெருந்தன்மையை உதறிய சின்னபுத்திக்காரர்கள் என அவரின் அன்பர்களைப் பற்றிக் கூறலாம். எனவே, நிபந்தனையின்றி புகுவிசைவு/விசா தந்தால் வரலாம். இல்லையேல் தன்மானத்துடன் மறுப்பதே சிறப்பு. நில்லா உலகில் தன்மானம் இழக்க வேண்டா.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
5/4/2010 10:49:00 AM

நண்பர் திரு எம்.ஜெ.அஜ்மீர் அலி அவர்களே, படித்த நீஙகளுமா இப்படி எழுதுவது. தாயுள்ளத்திற்கும் பேயுள்ளத்திற்கும், முடியாட்சிக்கும் குடியாட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா?தமிழ் இன உணர்வைப்பற்றி சிங்கள முதல்வரிடம் பேசி/எழுதி பயன் என்ன?

By தஞ்சை ராஜு
5/4/2010 10:48:00 AM

நண்பர் திரு எம்.ஜெ.அக்பர் அலி அவர்களே, படித்த நீஙகளுமா இப்படி எழுதுவது. தாயுள்ளத்திற்கும் பேயுள்ளத்திற்கும், முடியாட்சிக்கும் குடியாட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவைல்லையா?தமிழ் இன உணர்வைப்பற்றி சிங்கள முதல்வரிம் பேசி/எழுதி பயன் என்ன?

By தஞ்சை ராஜு
5/4/2010 10:42:00 AM

*பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி -​ அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும்,​​ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும்* காலம் தாழ்த்திய செயலாக இருந்தாலும், பாராட்டப்பட வேண்டியது. இதனை இத்தனை சர்ச்சைகளுக்கு முன்பே செய்திருக்கலாமே!! இருப்பினும், முதல்வருக்கு பாராட்டுகள்.

By Abdul Rahman - Dubai
5/4/2010 10:36:00 AM

தமிழ்ச்சிங்கத்திற்கு வயதானாலும் இன்னமும் அதே சாணக்கியத்தனம் மறையவில்லை. வாழ்க கலைஞரே! தாங்கள் இன்னமும் ஆயிரம் பிறை காணவேண்டும்.

By Ravi
5/4/2010 10:15:00 AM

What necessity makes the State Govt to shoulder the cost of treatment for Parvathi. Karunanidhi should tell the nation.

By salah
5/4/2010 10:15:00 AM

Like Rajapakse, Karunanidhi wants to confine her in the hospital as a jail. what a cruel intention.

By ravivararo
5/4/2010 9:42:00 AM

"அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" மருத்துவ மணையா? சிறைச் சாலையா? தமது சொந்த செலவில் தாம் விரும்பும் இடத்தில் தங்கி சிகிச்சை பெற தடை ஏன்?

By Unmai
5/4/2010 8:35:00 AM

athaavathu kaithiyaaka vanthu enkalidamser enru solkiraar inthakkilavar, kaalam orunaal pathilsollum.

By augustin metha
5/4/2010 8:25:00 AM

இர‌வோடு இர‌வாக‌ யாருக்கும் தெரியாம‌ல் அழைத்து வ‌ந்து த‌மிழ‌க‌த்தை அம‌ளி காடாக‌ மாற்ற‌ திட்ட‌ம் தீட்டிய‌ க‌ள்ள‌தோனி கும்ப‌ளை முறிய‌டித்து வீர‌த்தாயை ர‌த்தின‌ க‌ம்ப‌ள‌ம் விரித்து வ‌ர‌வேற்று அத‌ற்க்கான‌ சில‌வுக‌ளையும் அர‌சே ஏற்க்கும் என்று சொன்ன‌ எங்க‌ளின் தாயுள்ள‌ம் மிக்க‌ த‌ல‌வ‌ர் க‌ல‌ஞ‌ரை வாழ்த்த‌ வார்த்தைக‌ளே இல்லை. மூவேந்த‌னே உன் ச‌னனாய‌க‌ முடியாட்சி இன்னும் ப‌ல்லான்டு தொட‌ர‌வேன்டும் என் நினைக்கும் கோடான‌கோடி த‌மிழ் நெஞ்ச‌ங்க‌ளில் நானும் ஒருவ‌ன். எம்.ஜே.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
5/4/2010 8:19:00 AM

எமன் உன்னை நெருங்கும் போது நீ நிபந்தனைகள் சொல்லிக் கொண்டிருப்பாயா! உன்னை எப்போது அவன் கவர்ந்து செல்வான் என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

By நவீன் சென்னை
5/4/2010 7:50:00 AM

தமிழக அரசு நடவடிக்கை மிகச்சரி. கலைஞர் தாயுள்ளம் கொண்டவர்.

By பரமசிவ வன்னியர்
5/4/2010 7:50:00 AM

தமிழக அரசின் சரியான முடிவு

By A Elangovan
5/4/2010 7:31:00 AM

வர்றாங்க..வர்றாங்க பார்வதியம்மா வர்றாங்க !..பூங்கொத்த கொண்டுகிட்டு இன்னொரு அக்கா வருவாங்க!! ஆரஞ்சுப் பழம் கணக்கில் "அதக் கொண்டுகிட்டு"அவுங்க அண்ணன் வருவாங்க !!! நோயாளிப் போர்வையிலே போராளி வருவாங்க !! அம்மா கதை முடியும்போது மனிதாபிமானத்தை காப்பாற்ற பிரபாகரனும் வருவாங்க !!! எல்லோரும் வந்தவுடன் அகண்ட தமிழகம் காண்பாங்க!!! அப்போ கருணாநிதியின் குடும்பம் அகதியாகி ஓடுவாங்க !!!!!@ rajasji

By rajasji
5/4/2010 6:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக