வியாழன், 6 மே, 2010

என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது: முதல்வர் கருணாநிதி



"பெண் சிங்கம்' படத்தின் பாடல் குறுந்தகடை கருணாநிதி வெளியிட, பெற்றுக் கொள்கிறார் நடிகர் கமல்ஹாசன். உடன் ஏவி.எம்.சரவணன், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் வைரம
சென்னை, மே 1: எழுதும் வல்லமை உள்ளதால் என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள புதிய படம் "பெண் சிங்கம்'. இது கருணாநிதியின் 75-வது படம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கருணாநிதி மேலும் பேசியதாவது: இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெயமுருகனும், முருகேசனும் எளிமையானவர்கள். படங்களின் மூலம் நல்ல கருத்தை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்.÷என் கலையுலக வாழ்க்கையில் தொடக்கத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்பட்டன. அபிமன்யு, ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களின்போது அவை நடைபெற்றன. அதன்பிறகே நிலையான இடம் கிடைத்தது. ஒரு சமயம் என்னுடைய பெயரை தலைப்பில் போட மறுத்தவர்கள், பிற்காலத்தில் நீங்கள் கதை எழுதாவிட்டாலும் உங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என கூறியதுண்டு. திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரோடு பழகியதையும் உரையாடியதையும் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். கலைவாணரையும் மறக்கவில்லை. கலைவாணர் அரங்கம் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என கமல், வைரமுத்து, வாலி உள்ளிட்ட பலரும் தெரிவித்தனர். என் மீது அவர்களுக்கு கோபம் ஏன் எனத் தெரியவில்லை. நான் வாழ்ந்தது போதாதா? 86 வயதில் இடையிடையே பட்ட துன்பங்கள் போதாதா? என்னால் இயன்ற அளவு நற்காரியங்களை செயல்படுத்தியுள்ளேன். இளைஞர்களுக்கு வழிவிட்டு நான் விலக நினைத்தாலும் நான் சார்ந்திருக்கும் துறையினர் என்னை விடுவதில்லை.÷நான் சிறுவயது முதல் எழுத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்தேன். அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. சில நேரங்களில் என்னை உணராதவர்கள், என் எழுத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் தமிழால் உயர்ந்தேன். நான் இந்த அளவுக்கு வளர கலையுலகினரான நீங்கள்தான் காரணம் என்பதை மறக்க முடியுமா? இன்று பலருக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்ய உத்தரவிடும் அளவுக்கு என் பேனா என்னை உயர்த்தியிருக்கிறது.÷உயிர் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரின் வாழ்த்துகளோடும் லட்சக்கணக்கானோரின் வாழ்த்துகளோடும் பணி தொடரும். "பெண் சிங்கம்' படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கருத்துக்கள்

உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை இருக்கின்ற காரணத்தால்தான் தமிழரின் தாய்நிலத்தைமீட்கவும் ஈழத்தமிழர்கள் விடுதலை பெறவும் அதனைப் பயன்படுத்த வேண்டுகிறோம். இடையிடையே துன்பங்கள் பட்டது நீங்கள்மட்டும் அல்லர்; பேரழிவிற்கு ஆளாகி இதுவரை சந்திக்காத துன்பங்கள் அடைந்தது ஈழத்தமிழ் மக்களும்தான். அவர்கள் பேரழிவின்பொழுது கண்டும்காணமால் அல்லது நேரிடையாக அல்லது வாய்வாளாதிருந்து ஒத்துழைத்ததாக உள்ள பழியைப் போக்க எழுத்துக் திறமையைப் பயன்படுத்தி வாழ்வினில் அவர்கள் அடைந்த துயரத்தைப் பழிகளை நீக்கி இருக்கின்ற உயிர்களையாவது காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். உங்கள் எழுத்தாற்றல் தமிழ்ப்பகைக்குத் துணை போகக்கூடாது. தமிழ் வாழ்விற்குத் துணை போக வேண்டும் என விழையும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/6/2010 1:06:00 PM

பல கோடிகணக்கில் மக்கள் வரி பணத்தை சூறை ஆடிய வெட்கத்துக்கு உரிய இவரை இனியாவது நிம்மதியாக தூங்க இறைவன் அருள் புரியட்டும்

By thamizh
5/3/2010 10:15:00 PM

நீ இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இன்னும் அனுபவிக்க இருக்கு அதை அவர்களும் (கமல், வைரமுத்து, வாலி) ஏனைய தமிழர்களும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் போலும். செய்த தொரோகம் உன்னையும் உன் சந்ததியையும் சும்மா விட்றுமா என்ன? நீ கதை எழுதிகிட்டே இருக்கிறே ஆனால் படம் பார்க்கத்தான் இப்ப யாரும் வர்றதில்லை. கடைசியா எந்த படம் 100 நாள் ஓடிச்சு?

By வாடா மன்னாரு
5/3/2010 4:57:00 AM

very nice corton,

By somasundaram n
5/2/2010 10:38:00 PM

Who cares about your writings?? It will die with you. You will go down as a man who did nothing to save hundreds of thousands Tamils from a genocide in your period. Let your writings die with you too, we dont want our children to read it.

By Anton
5/2/2010 4:43:00 PM

உன் எழுதில் யாருக்கும் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் எனக்கு உன்மேல் நபிகையே இல்லை

By Natraj
5/2/2010 12:00:00 PM

very good

By p. Sekar
5/2/2010 11:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக