ஞாயிறு, 2 மே, 2010

எங்கும் - எதிலும் காங்கிரஸ்: தங்கபாலு வேண்டுகோள்கோவை, மே 1: எங்கும் காங்கிரஸ், எதிலும் காங்கிரஸ் என்ற நிலை வர தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.கோவை போத்தனூரில் சனிக்கிழமை நிறைவுபெற்ற சேவாதள தொண்டர்கள் பயிற்சி முகாமில் அவர் பேசியது:காங்கிரஸ் கட்சி எல்லா காலகட்டங்களிலும், எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்கிறது. மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு தான் இதற்கு முக்கிய காரணம். பல்வேறு நிலைகளில் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சேவாதள பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதே போல மாவட்டம், ஒன்றியம், நகராட்சி, ஊராட்சிகள் தோறும் முகாம்கள் நடத்த வேண்டும். ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சி புகழ் அடைய சேவாதள தொண்டர்கள் முயற்சி செய்ய வேண்டும்.எங்கும் காங்கிரஸ், எதிலும் காங்கிரஸ் என்ற நிலை ஏற்பட கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் மக்களை தேடிச்செல்ல வேண்டும். தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி பக்கபலமாக இருக்கும் என்றார்.
கருத்துக்கள்

எங்கும் சீரழிவு!எதிலும் சீரழிவு! என்னும் நிலை தொடர தமிழின அழிப்பு தொடர வன்முறை தொடர தாய்நில இழப்பு தொடர ஊழல் தொடர கூட்டாட்சி முறை அழிப்பு தொடர வேண்டும் என்றால் தங்கபாலுவின் ஆசை தொடர வேண்டும். நாம் நாமாகத் தன்மானத்துடனும் தன்னுரிமையுடனும் வாழ இவர் கனவு காணாமல் போகவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக