திங்கள், 3 மே, 2010

பிரபாகரன் கொல்லப்பட்ட நாள் மே 18-ல் வெற்றி ஊர்வலம்: கோத்தபய



கொழும்பு, மே 2: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.÷ஆனையிறவில் போர் ஹீரோக்கள் நினைவுச் சின்னத்தை திறந்துவைத்தபின், செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.÷அதற்கு முன்னதாக ஒரு வாரத்துக்கு போர் ஹீரோக்கள் வாரம் கொண்டாடப்படும். இதில் வீரர்களின் பெற்றோர்கள், மனைவிகள், குழந்தைகள், உறவினர்கள் பங்கேற்பார்கள் என்றார்.÷இந்த ஆண்டு மட்டும் வெற்றி ஊர்வலம் மே 20-ல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.÷விடுதலைப் புலிகளுடனான போரில், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துக்கள்

கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். உலகெங்கிலும் உள்ளவர்கள் இதே நாளை தாய்மண் விடுதலை ஈகிகள் நாள் எனக் கொண்டாட வேண்டும். தமிழ் ஈழம் வெல்க! தாய்மண் காக்க உயிர்நீத்தவர்களுக்கான வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 4:26:00 AM

வரலாற்றில் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் வீரர்களையும் பற்றிப் பெருமையாகப் படிக்கின்றோம். அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் தன்மதிப்பைக் காக்கத் தற்கொலை புரிந்து கொண்டிருநதாலும் அவர்களை இழிவாக எண்ணுவதில்லை. வீர மரணங்களையும் தாய்நாடு காத்து மடிந்த நிகழ்வுகளையும் வணக்கத்துடனே நினைவு கூர்கின்றோம். தொன்மங்களில் வரும் இராமன், கண்ணன் ஆகியோரையும் தற்கொலை புரிந்து கொண்டவர்கள் என்று இழிவாக எண்ணாமல் வணங்கி மகிழ்கிறோம். எனவே, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு வேளை கற்பனையாக இருந்தாலும் அவர் வீரமும் நாட்டு மக்கள் விடுதலைக்காக அவர் பாடுபட்ட திறமும் ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ்மானம் காக்க வாராது வந்த மாமணியாய் விளங்கும் செம்மாப்பும் என்றென்றும் நினைவில் கொண்டு போற்றத்தக்கனவே! கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். தமிழ் ஈழம் வெல்க! தாய்மண் காக்க உ

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 4:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக