திங்கள், 3 மே, 2010

கொழும்பு:'விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தினர் பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும்'என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கை ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்ஷே கூறியதாவது:கடந்தாண்டு நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தின் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். இருந்தாலும். இந்தாண்டு மட்டும் வரும் 20ம் தேதி இந்த அணிவகுப்பு நடக்கும்.இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தமிழ் மக்கள், தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அவர்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு கோத்தபயா ராஜபக்ஷே கூறினார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
திருவள்ளுவனாரே உமது வாக்கு வேத வாக்கு .உங்களை போன்றவர்கள் தான் எமது தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பாற்றவேண்டும். நன்றி நாதன் கனடா
by s nathan,toronto,Canada 03-05-2010 07:36:30 IST

வரலாற்றில் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் வீரர்களையும் பற்றிப் பெருமையாகப் படிக்கின்றோம். அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் தன்மதிப்பைக் காக்கத் தற்கொலை புரிந்து கொண்டிருநதாலும் அவர்களை இழிவாக எண்ணுவதில்லை. வீர மரணங்களையும் தாய்நாடு காத்து மடிந்த நிகழ்வுகளையும் வணக்கத்துடனே நினைவு கூர்கின்றோம். தொன்மங்களில் வரும் இராமன், கண்ணன் ஆகியோரையும் தற்கொலை புரிந்து கொண்டவர்கள் என்று இழிவாக எண்ணாமல் வணங்கி மகிழ்கிறோம். எனவே, தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்கிறார் என்ற நம்பிக்கை ஒரு வேளை கற்பனையாக இருந்தாலும் அவர் வீரமும் நாட்டு மக்கள் விடுதலைக்காக அவர் பாடுபட்ட திறமும் ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ்மானம் காக்க வாராது வந்த மாமணியாய் விளங்கும் செம்மாப்பும் என்றென்றும் நினைவில் கொண்டு போற்றத்தக்கனவே! கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். உலகெங்கிலும் உள்ளவர்கள் இதே நாளை தாய்மண் விடுதலை ஈகிகள் நாள் எனக் கொண்டாட வேண்டும். தமிழ் ஈழம் வெல்க!
by I. Thiruvalluvan,chennai,India 03-05-2010 04:40:59 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக