ஞாயிறு, 2 மே, 2010

முதல்வர் இன்று தில்லி பயணம்



சென்னை, மே. 1: தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி இரண்டு நாள் பயணமாக புதுதில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்குமாறு திட்டக்குழு துணைத் தலைவரைச் சந்தித்துக் கோருவார். தமிழ்நாட்டுக்கான திட்ட ஒதுக்கீட்டு அளவை அப்போது விவாதித்து இறுதி செய்வார். திட்ட ஒதுக்கீடாக ரூ.20,000 கோடியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மருத்துவ சிகிச்சை காப்புறுதி திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், வீடமைப்பு திட்டம் ஆகியவற்றை விவரித்து அவற்றுக்குக் கூடுதல் நிதியைப் பெறுவார். நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பெரும் திட்டம் குறித்தும் அப்போது எடுத்துரைப்பார். கோவையில் ஜூன் 23 தொடங்கி நடைபெறவுள்ள உலக செம்மொழி மாநாட்டுக்கு வருமாறு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, கூட்டணியின் இதர தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுப்பார். தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் மேலவையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக சட்ட மேலவை அமைப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுப்பார். முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் கோரியபடி தமிழகத்தின் பிரதிநிதியை நியமித்துவிட்டதை எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் அளவு தொடர்ந்து கிடைக்கவும், இந்தப் பிரச்னையில் விரைவில் சுமுகத் தீர்வு ஏற்படவும் மத்திய நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.ஒகேனக்கல்லில் தமிழக அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகம் எழுப்பி வரும் ஆட்சேபணைகள் சரியல்ல, தவறான வழிகாட்டலின் பேரில் கூறப்படும் அத்தகவல்கள் உண்மையல்ல என்பதை விளக்கி, அத்திட்டம் நிறைவேற மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடுவார்.தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் மலேசியாவிலிருந்து வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரை மீண்டும் சென்னைக்கு வர அனுமதித்து தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதற்கான உதவிகளைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவார்.இலங்கையில் இன்னமும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவில் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பவும், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் சுய மரியாதையுடனும் சுயச்சார்புடனும் வாழ்வதற்கு ஏற்ப, அதிகாரப் பகிர்வு பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார். தமிழர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு விரைந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உதவும் என்று தெரிவிப்பார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூத்த தலைவர் என்ற வகையில் மத்திய அரசின் ஓராண்டுச் சாதனையை ஆய்வு செய்ய உதவுவார். அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகளையும் உணர்த்துவார். விலைவாசியைக் குறைக்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும் மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் மாநில அரசுகளுக்கு இந்த நோக்கில் செய்ய வேண்டிய உதவிகளையும் விவரிப்பார். மாநிலங்களவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து கூட்டணி சார்பில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதில் அவர் பங்கேற்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. திராவிடர் கழகத்தின் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் சார்பில் ரூ.10 கோடி செலவில் தில்லியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் கருணாநிதி. திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புமாறு பயண நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாள் பயணத்தின்போது தீவிர அரசியல் ஆலோசனைகளும் இடம் பெறும் என்று தெரிகிறது.
கருத்துக்கள்

வாரம் 2 அல்லது 3 முறை குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றாலும் இதுவரை செம்மொழி அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்காமல் காலந்தாழ்த்துவதைக் கண்டித்தல், தமிழர் வாழ்விடங்களில் தமிழர்களையே தூதர்களாக நியமித்தல்,உலக நாடுகளில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தல், இந்திய வரலாற்றில் தமிழகம் பற்றிய இருட்டடிப்பு வேலையை நிறுத்தி உலக அறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குமரியிலிருந்து தொடங்கும் இந்திய வரலாற்றை எழுதச் செய்தல் என எத்தனையோ பொரு்ணமைகளை வலியுறுத்தலாமே! அடிமையால் கோரிக்கை வைக்கமுடியாதோ! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:23:00 AM

வழக்கத்திற்கு மாறான செய்தி விளக்கத்தைப் படிக்கும் பொழுது மதுரைக்காரன் கூற்றிலும் உண்மை இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது. எனினும் அழகிரி அல்லது இராசாவிற்கு மாற்றாகக் கனி மொழி என்றில்லாமல் அழகிரி இராசவுடன் கனிமொழி,என மன்றாடக் குடும்பத்தலைவர் என்ற முறையில் கோரிக்கை வைப்பது போன்று தமிழக முதல்வர் என்ற முறையிலும் ஒப்புக்காவது சில கோரிக்கைகள் வைக்காமலா போவார். இதுவரை புதுதில்லிக்கு அனுப்பிய மடல்களில் வேண்டியவற்றை வலியுறுத்தலாமே! சேலம் உருக்காலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டு உதவிகள், தமிழக மீனவர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்கான எச்சரிக்கை, உலக அரங்கில் சிங்களத்தின் எடுபிடியாக இந்திய அரசு வேலை செய்யாமல் உண்மை வெளிவரத் துணை நிற்றல் (தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளுமாறு இந்திய அரசு இதற்கு உடன்படாது என்பது உண்மைதான்)செம்மொழித் தகுதி அடிப்படையில் தமிழுக்கான முழு உதவிகளையும் உடன் வழங்க வலியுறுத்தல், வாரம் 2 அல்லது 3 முறை குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றாலும் இதுவரை செம்மொழி அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்க

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:22:00 AM

Mr Karunanidhi, please don't come back to Tamilnadu if your are not able to get Union minister for all of your family memmbers. Don't talk about any Tamil issue, in your context it is resolved. Please arrange your meeting with Rajapakse for sharing your appreciation to him

By Mamatti
5/2/2010 3:18:00 AM

கருணாநிதி லிஸ்ட்ல உள்ள பாதிய டில்லில பேசுனாலே, தமிழ்நாடு சொர்க்க பூமியா ஆயிருக்குமே. அவர் எதுக்குப் போறார்னு மக்களுக்குத் தெரியாதா? ராசா பதவிக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு மிரட்டுரதுக்குத்தான் போறாரு.

By மதுரைக்காரன்
5/2/2010 1:39:00 AM

கருணாநிதி லிஸ்ட்ல உள்ள பாதிய டில்லில பேசுனாலே, தமிழ்நாடு சொர்க்க பூமியா ஆயிருக்குமே. அவர் எதுக்குப் போறார்னு மக்களுக்குத் தெரியாதா? ராசா பதவிக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு மிரட்டுரதுக்குத்தான் போறாரு.

By Madhuraikkaaran
5/2/2010 1:38:00 AM

கருணாநிதி தமிழ்நாட்டுக்காக என்னைக்கு டில்லிக்குப் போனாரு? ராசாவ தூக்கக்கூடாதுன்னு மிரட்டுரதுக்குத் தான் போவாரு.

By மதுரைக்காரன்
5/2/2010 1:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக