செவ்வாய், 4 மே, 2010

செம்மொழி மாநாட்டுக்காக சோனியாவை சிரமப்படுத்த விரும்பவில்லை: முதல்வர் பேட்டி



முதல்வர் கருணாநிதியை தனது இல்லத்தில் திங்கள்கிழமை இருகரம் கூப்பி வரவேற்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
புதுதில்லி, ​​ மே 3:​ கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வருமாறு வற்புறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சிரமப்படுத்த விரும்பவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்,​​ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்த பிறகு மாலையில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை ஏற்கெனவே கேட்டுக் கொண்டோம்.​ அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.சமீபத்தில்தான் தமிழக சட்டப்பேரவைக் கட்டடத் திறப்பு விழாவுக்குப் பிரதமர் மன்மோகன் சிங்கும்,​​ ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் வந்திருந்தார்கள்.​ அதனால் அவர்களை மீண்டும் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை.மாநாட்டுக்காக கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.சேலம் உருக்காலை தொடங்க இடம் கொடுத்தவர்கள் வேலை வாய்ப்பு கோரி கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.​ இடம் தந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதம் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருப்பதை நிறைவேற்ற முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.பக்கத்து மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னை பற்றி திட்டக் குழு கூட்டத்தில் பேசினேன்.​ அக் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பதால் தனிப்பட்ட முறையில் அவருக்கு இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.​ ராசா தலித் என்பதால் ஆதிக்க சக்திகள் அவருக்கு எதிராக ஸ்பெக்ட்ரம் புகாரை எழுப்பி வருகின்றன.இலங்கையில் போர் முடிந்துவிட்ட நிலையில்,​​ அதிகாரப் பங்களிப்பு செய்வது தொடர்பாக அந்த அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.​ மத்திய அரசு மூலமாகத்தான் வலியுறுத்துவோம் என்று கருணாநிதி கூறினார்.மகளிர் மசோதாவை விரைவில் நிறைவேற்றிட வலியுறுத்தல்மகளிர் மசோதாவை மக்களவையில் விரைவில் நிறைவேற்றிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்,​​ தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் வலியுறுத்தினார்.மூன்று நாள் பயணமாக தில்லி வந்துள்ள முதல்வர் கருணாநிதி,​​ சோனியா காந்தியை திங்கள்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.​ சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர்.​ சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் மசோதாவை மக்களவையில் விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றிட வேண்டும் என்று சோனியாவிடம் அவர் அப்போது வலியுறுத்தினார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் சட்ட மேலவை கொண்டுவருவது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.​ அதை உடனடியாக நிறைவேற்றுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன் என்றார்.​ ​எதிர்க்கட்சிகள் மீது புகார்:​​ 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று அதிமுக,​​ பாஜக ஆகிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.​ இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் கடும் அமளி ஏற்பட்டது.​ இதுகுறித்து கருணாநிதியிடம் கேட்டபோது,​​ மத்திய அமைச்சர் ஆ.​ ராசா தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அவர் மீது திட்டமிட்டு புகார் கூறிவருகின்றன.​ ஆதிக்க சக்திகள் அவரை வெளியேற்ற சூழ்ச்சி செய்து வருகின்றன என்றார்.​ இதுதொடர்பாக நிருபர்கள் அவரிடம் மேலும் கேள்விகள் கேட்டதற்கு முதல்வர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.முதல்வருடன் அவருடைய மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி,​​ மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும் சோனியாவுடனான சந்திப்பின்போது உடன் இருந்தனர்.​ ​ பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.முன்னதாக திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,​​ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.​ 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.பா.ம.க.வுடன் கூட்டா?​​​​வருங்காலத்தில் திமுக கூட்டணியில் பா.ம.க.​ இணைய வாய்ப்பு உள்ளதா என்று தெரியாது.பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவரோடு ஆலோசனை ஏதும் நடத்தவில்லை என்று முதல்வர் கூறினார்.
கருத்துக்கள்

நாம்தமிழர் என்ற உணர்வின்அடிப்படையிலும் மனிதநேயப்படுகொலை, இனப்படுகொலை முதலானவற்றிற்குக் காரணமானவர்களை எதிர்க்கவும் மாநாட்டிற்கு வரவில்லை என்பவர்கள் உணர்வைப் பாராட்டலாம்.அல்லது இனஅழிப்புக் குற்ற உணர்வில் வரவில்லை என்றாலும் பாராட்டலாம்.தொடர்ந்து இன அழிப்பில் ஈடுபட்டு வருவதால் அதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, முதல்வரின் தமிழைக் கேட்கவாவது வந்திருக்க வேண்டும். அரசியல் காரணங்களாலும் தமிழ் எதிர்ப்புக் காரணங்களாலும் வர மறுப்பவர்களை முதல்வர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்பது புரிகிறது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
5/4/2010 11:21:00 AM

கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி / சிங் எப்படி வருவார்கள்... ( அவர்கள் தமிழரை ஒரு இந்திய பிரஜையா கூட நெனைக்க வில்லை.....வேட்க்க கேடு)

By appavi
5/4/2010 10:05:00 AM

கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி / சிங் எப்படி வருவார்கள்... (பல அயிர உயிர்களே காவு வாங்கியவர்கள்..)

By tamilan
5/4/2010 10:02:00 AM

கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை. யாரும் பார்க்கவில்லை. அவர்கள் இலவசக் கலர் டிவியில் மூழ்கிப் போய்விட்டார்கள். கவலைப்படாதீர்கள் கருணாநிதி.

By ravivararo
5/4/2010 9:46:00 AM

கலைஞரே !...அழைப்பிதழ் அடிச்சு எடுத்துகிட்டு ..உருண்டடுச்சு பேர பெருசா எழுதி எடுத்துகிட்டு போனீங்களே என்னாச்சு ?...2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் டோஸ் கெடச்சுதா ?...அழகிரிய மந்திரியிலேர்ந்து கழட்டி விட்டுட்டு கனிய மந்திரியாக்க மாட்டேனுட்டாங்களா ??? எப்படியோ தமிழ் மொழிய கேவலப் படுத்திப் புட்டீங்க !!! இன்னுரும் எங்க புரட்சித் தலைவி இருக்க வேண்டிய இடத்தில இருந்தா...அமெரிக்க அதிபர் போன் போட்டு அழைப் பிதழ் கேட்டு வாங்கிகிட்டு விழாவுக்கு ஓடி வருவாரு !!!...hehehe...ஒருத்த வீட்டுக்கு பத்திரிகை கொடுக்க போயி :::அவங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பலன்னு சொன்னால் எப்படி கேவலமா இருக்கும் ! ஆக டெல்லி விசிட் நாறிப் போச்சு !!! தமிழ் மொழியின் மாநாட்டிற்கு நாட்டின் பிரதமர் ஓடி வந்து கலந்து கொள்ள வில்லை என்றால்....நீ தமிழ் மொழிய கேவலப் படுத்தி புட்டய்யா !

By rajasji
5/4/2010 8:38:00 AM

ஒரு கக்கூஸ் கட்டுவதற்கு கூட டெண்டர் விடுகிறார்கள். ஆனால் எதுவுமே இல்லாமல் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்து விட்டு தலித் பெயரை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். இவர்கள் ஆரம்பித்த டம்மி கம்பெனி பெயர்கள் ZEBRA, SWAN, PARROT. என்ன ஒரு அப்பட்டமான ஊழல்.

By நவீன் சென்னை
5/4/2010 7:52:00 AM

ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டு அதை ஜாதி பெயரை வைத்து தப்பிக்க நினைக்கு இவர்களை சும்மா விடக் கூடாது.

By நவீன் சென்னை
5/4/2010 7:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக