சென்னை, மே. 3: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்தத் தகவலை துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார். சிகிச்சைக்காக தம்மை திருச்சிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி பார்வதி அம்மாளின் பெருவிரல் ரேகை பதியப்பட்ட கடிதம் ஒன்று இ-மெயில் மூலமாக தமிழக அரசுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்த ஸ்டாலின், சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவரது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு மத்திய உள்துறைச் செயலருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார்.எனினும் என்னென்ன நிபந்தனைகள் என அவர் குறிப்பிடவில்லை.பார்வதியம்மாள் வலியுறுத்தினால் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் உறுதியளித்ததையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டினார்.
கருத்துக்கள்
மாநில அரசின் மடல்கள் என்னவாகும் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்ட மடல்களில் ஒன்றாக இம்மடல் ஆகிவிடக்கூடாது. ஆனால் அதற்கு முழு ஈடுபாடு தேவை. மேலும் இவர்களே நிபந்தனைகளைச் சுட்டி வம்பு வளர்ப்பானேன்? தரட்டும் இசைவு! வரட்டும் வீர அன்னை! அதன்பின் எதையும் கூறலாம்.
நம்பிக்கைக் குழப்பத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/4/2010 3:01:00 AM
5/4/2010 3:01:00 AM