புதன், 5 மே, 2010

தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி

மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார்.

உலகத் தமிழினத்திற்கு முற்போக்குச் சிந்தனை மிகவும் அவசியமாகும். அதேவேளை சிந்தனைப் பரிமாற்றங்களை உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை.சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.

உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவிக்கையில் உலகெங்கும் வாழ்கிற தமிழர்களுக்குச் சொந்த நாடும் அரசாங்கமும் இல்லாதது பெரும் குறையாகும், இலங்கைத் தமிழர்கள் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். இதனைக் கண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் மெளனம் சாதிக்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் நிலை குறித்து உலக நாடுகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றார். தமிழர்களுக்குச் சொந்த நாடு வேண்டும் என்று போராடிய தலைவனின் தாயாருக்கு மருத்துவம் பார்க்கக்கூட அனுமதி இல்லை.இந்த அவலம் கண்டு மனம் வேதனைப்படுகிறது.

6 கோடி மக்களால் 3 லட்சம் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது வேதனை மிக்க கொடுமையாகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்.சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(Visited 72 times, 72 visits today) }


உலகத்தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முற்றிலும் தகுதியுடையவர் முனைவர இராமசாமி. தமிழக மக்கள் கட்சித்தலைமைகளிடமும் கலையுலகினரிடமும் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களை நம்பினால் எப்பயனும விளையாது. எனவே, உணர்வும் ஆற்றலும் மிக்க முனைவர் இராமசாமி உலகத தமிழர்களை ஒன்றிணைத்துத் தாய்மண் விடுதலைக்கு வழி வகு்கக வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக