ஞாயிறு, 2 மே, 2010

நளினி - பிரியங்கா சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருட்டிணன்கடலூரில் சனிக்கிழமை சுவாமி சகஜானந்தா நினைவு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி.
கடலூர், மே 1: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி நளினியை, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கடலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:நளினியுடன் பிரியங்கா சந்தித்துப் பேசிய பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது இந்திய மக்களுக்கே பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இது மனிதாபிமானமற்ற செயல். இந்திய அரசு அவரது மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவரது வருகையால் இந்தியாவில் தீவிரவாதம் தோன்றி, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றால் அதை கண்காணிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். தமிழ்ச் சமுதாயத்துக்கே எதிராகச் செயல்படுகிறது திமுக.சுவாமி சகஜானந்தா மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். எனவே அவரது குருபூஜையில் பாஜக கலந்து கொள்கிறது என்றார் ராதாகிருஷ்ணன்.பாஜக சார்பில் பேரணி: சுவாமி சகஜானந்தா குருபூஜையை முன்னிட்டு கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு, பாஜக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது. பேரணியை முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் நாகராஜன், மாநிலச் செயலர் ஆதவன், தாழ்த்தப்பட்டோர் அணி செயலர் பழநிவேல், மண்டலத் தலைவர் ஸ்ரீதரன், மாவட்டத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

தமிழ் மன்பதைக்கு எதிரான செயலைக் கண்டிப்பதற்குப் பாராட்டுகள். எனினும் நளினி பிரியங்கா சந்திப்பு குறித்து அறிக்கை அளித்தாலும் அதில் உண்மை இருக்கும் என்று எவ்வாறு நம்புவது? நளினியை விடுதலை செய்தாலே உண்மை வெளிவருமே! அதனால்தான் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, நளினியின் விடுதலையை வலியுறுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக