சனி, 11 செப்டம்பர், 2010

தலையங்கம்: யாமறியோம் பராபரமே!


குற்றவாளி மட்டுமல்ல, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பவரும் தண்டனைக்குரியவரே என்கிறது இந்தியக் குற்றவியல் சட்டம். தவறு செய்பவர்களையும், தவறான நபர்களையும் தனது அமைச்சரவையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதமர் நல்லாட்சி நடத்துவதாகக் கூறினால் அதைவிடப் பெரிய நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, பலவித குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து பொறுப்பான பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது நிரூபிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான பதவிகளில் அவர்கள் நியமிக்கப்படுவதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விசாரணையே நடத்தப்படாமல் தடுக்கப்பட்டு விடுகிறதே, பிறகு எங்கே நிரூபிப்பது?இப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நாங்கள் தீர்மானித்து விட்டோம், அவரைப் பதவியில் அமர்த்தியே தீருவோம் என்று செயல்பட்டனரே தவிர, தங்களது வேட்பாளரை மாற்றவில்லை. பதவியில் அமர்ந்துவிட்டால், குற்றச்சாட்டுகள் பிசுபிசுத்துவிடும் என்பது மட்டுமல்ல, சட்டம் எதுவும் செய்துவிடாது என்கிற ஆணவம்தான் காரணம்.தலைமைத் தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லாவை நியமித்தபோது, பாரபட்சமில்லாமல் நடக்க வேண்டிய அந்தப் பதவியில் தனது மனைவியின் பெயரில் ஒரு சமூகசேவை அமைப்பை நடத்தி, அதன்மூலம் பல நிறுவனங்களிடம் சாவ்லா நன்கொடை பெற்றதை அரசு பொருள்படுத்தவே இல்லை. மேலும், சோனியா காந்தியிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்கிற ஒரே காரணத்துக்காக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டார் என்பது காங்கிரஸ்காரர்களுக்குப் பெருமையாக இருக்கலாம், ஆனால் இந்திய ஜனநாயகத்துக்கு அது தலைகுனிவாக அல்லவா இருந்தது?இந்த வரிசையில் இப்போது மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலர் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு மூத்த அனுபவசாலியான ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பான ஒரு பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தோன்றும். ஆனால், இந்திய சரித்திரத்தில் இதுவரை வரலாறு காணாத ஊழல் என்று கருதப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்ட "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில் நேரடியாகத் தொடர்புடைய ஒருவர், மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது, ஜீரணிக்கவே இயலாத அதிகார ஆணவம் அல்லாமல் வேறென்ன?பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதன் காரணமே, ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரிக்கப்படாமலே மூடி மறைப்பதற்காகத்தானோ என்கிற ஐயப்பாட்டுக்குக் காரணம் இருக்கிறது. இந்தப் பதவியில் பிரத்யுஷ் சின்ஹா இருந்தபோது, கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் பிரச்னையை விசாரிக்கும்படி மத்திய புலனாய்வுத் துறைக்குப் பரிந்துரை செய்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை முடிவு மட்டுமல்ல என்றும் இதன் பின்னணியில் பல கோடி ரூபாய்கள் கைமாறி இருக்கக்கூடும் என்றும் பிரத்யுஷ் சின்ஹாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார். அந்த முடிவின் தொடர்ச்சியாகத்தான் மத்திய புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்புத் துறையின் தலைமையகத்தில் அதிரடி சோதனையை நடத்தியது.கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, அதாவது பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராகப் பதவி ஏற்பதற்கு ஒரு மாதம் முன்பே ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பூசி மெழுகும் பணியில் இறங்கிவிட்டார். தொலைத்தொடர்புத் துறைச் செயலர் என்கிற முறையில், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அவர் ஒரு கடிதம் அனுப்புகிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஒதுக்கீடுகளைப் பற்றி விசாரிக்கவோ, தணிக்கையிடவோ மத்திய தணிக்கை அதிகாரிக்குச் சட்டப்படி உரிமை உண்டா என்று மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் கோருவதாக அந்தக் கடிதம் அமைகிறது.கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியே, அதாவது அடுத்த நாளே, மத்திய சட்ட அமைச்சகம் ஏழு பக்க விளக்கத்தை அளிக்கிறது. அதன்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு கொள்கை முடிவு என்றும் அதில் தலையிட மத்திய தணிக்கை அதிகாரிக்கோ, மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையருக்கோ உரிமை இல்லை என்றும் எதிர்பார்த்த பதிலை சட்ட அமைச்சகத்திடமிருந்து அன்றைய தொலைத்தொடர்புத் துறைச் செயலரும் இன்றைய மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையருமான பி.ஜே. தாமஸ் வாங்கி வைத்துக் கொண்டார்.இப்போது, மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.ஜே. தாமஸýக்கு, ஸ்பெக்ட்ரம் பிரச்னையை அடக்கம் செய்யும் பணி மிகவும் சுலபமாகிவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவரே தீர்ப்பு வழங்கும் இடத்தில் அமர்ந்து, சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் காரணம் சாட்டி மத்திய புலனாய்வுத் துறையை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லி விடுவார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காற்றோடு கலந்து கரைந்துவிடும்.ஒரு யோக்கியவானான பிரதமரின் ஆட்சியில் இவை அரங்கேற்றப்படுகின்றன. திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதையாக இருக்கிறது இவர்கள் பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார்கள், இந்திய ஜனநாயகம் இப்படி இன்னும் எத்தனை சோதனைகளை நேரிட இருக்கிறதோ, யாமறியோம் பராபரமே...
கருத்துக்கள்

வைகோவின் கருத்தை எதிரொலித்துள்ளீர்கள். செவிடன் காதில் சங்கு ஊதிப் பயனில்லை என எண்ணாமல் முடிந்தவரை ஊதிப் பார்ப்போம் என்னும் முயற்சிக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:48:00 AM
கறை படியாத கரங்களுக்கு சொந்தக்கார ரான நமது பிரதமர் மன மோகன் சிங் ரொம்ப நல்லவர். எட்டுத் தலைமுறை தமிழர்களின் ஒரே தலைவர் கலைஞர். அரசியலில் பொதுத் தொண்டாற்ற அவதரித்துள்ள கலைஞரைப் பற்றி கைபர் கணவாய் வழியாக வந்த சிலரின் மோசடிக் குற்றச்சாட்டுகளை பிரதமர் நம்ப மாட்டார். மக்களின் நலன் கருதி , இந்திய நாட்டின் ஊழல் கலாச்சாரம் குறித்து முழுமையாக அறிந்த , தகுதியான ஒருவரை பிரதமர் தேர்வு செய்துள்ளார். நேர்மையான ஆந்த அதிகாரி கண்டிப்பாக கலைஞரின் நெருங்கிய உறவினரைப் போன்ற ராஜா மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி ராஜா குற்றமற்றவர் என்று அறிக்கை கொடுத்து இந்தியா தொடர்ந்து நேர்மையான பாதையில் செல்ல பாடுபடுவார். இதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டாம். வாழ்க பாரதம்.
By akkinik kunju dindigul
9/11/2010 5:34:00 AM
mr.manmohan is not suitable for pm post, he is shame for india
By RAVIKUMAR
9/11/2010 5:20:00 AM
NORMALLY PANJAB SINGH PEOPLE ARE CRITISISED AS SARDHARJIS .SO MANY STORIES ARE THERE REGARDING THIS MATTER. NOW OUR P.M ., IS PROVING THAT HE BELONGS TO THAT CATEGORY..ITALY MADAM HAS NO EYES TO SEE OR TO HEAR THIS KIND OF MATTERS REVEALED BY MEDIAS FROM TIME TO TIME.SHE NEEDS TO BE THE HEAD OF THE PARTY AND THE RING MASTER TO OUR BELOVED SARDHARJI
By rangaraj
9/11/2010 4:28:00 AM
நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசனே சொந்த மக்களை வேட்டையாடிய கொடூரம் எந்த நாட்டிலே நடந்தது? உலகத்தையே மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொள்ள விரும்பும் முதலாளித்துவ நாடு அமெரிக்கா. அதுவே நரமாமிச மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறது. சொந்த மக்களையே ரயிலில் வைத்து கொளுத்தி அதை காரணம் காட்டி முஸ்லீம் இனத்தையே வேட்டையாடிய கொடூரத்தை தெகல்கா இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டியது. பெண்கள்தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்களாம் மோடியை. அந்த கேடுகெட்ட கேடி சொல்கிறான். பெண்களுக்கு உண்டான உரிமைகளை இந்த பரதேசி ஒழுங்காக கொடுத்தானா என்றால் அதுதான் இல்லை. மலம் அள்ளினால் மோட்சத்துக்கு போகலாம், திராவிடர்கள் மலம் அள்ளினால் என்ன தப்பு என்று கேட்கிறான் இந்த முடிச்சவிக்கி நாதாறி. ஏண்டா நீயும் உன் அப்பனும் பூனூல் போட்ட பரதேசி
By tmp
9/11/2010 12:57:00 AM
இந்தியாவை இவர்கள் மட்டும் தான் தாயைப் போன்று நேசிக்கின்றார்களாம். அதாவது இந்தியாவுக்கு இவர்கள் மட்டும் தான் உரிமையாளர்களாம். இருக்கட்டும். பிறந்த மண்ணான இந்தியாவைப் பெற்றத் தாயைப் போன்று உயிராக நேசித்து அதற்காக தங்கள் வாழ்வை அற்பணிப்பவர்களுக்குத் தான் இந்தியா சொந்தம் என்பதை அப்படியே எழுத்துப் பிசகாமல் ஒப்புக் கொள்வோம். ஆனால் அதற்கு இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்
By tmp
9/11/2010 12:43:00 AM
மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன. இத்தகைய கொடூரங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களது வீர சாகசங்கள் போன்று விபரிப்பது அவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட சங்பரிவாரத்தின் கொலைமுகத்தை தெளிவாகவே காட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் முதல்வர் நரேந்திர மோடியின் ஆமோதிப்பின் பேரில் நடந்ததுதான் அக்கிரமத்திலும் அக்கிரம். இந்த கொடியவன் நரேந்தி
By tmp
9/11/2010 12:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக