ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தெற்கு ஆஸி. முதல்வர் அணிக்கு எதிரான நட்புறவு கிரிக்கெட்: தமிழக முதல்வர் அணி வெற்றி


சென்னை, செப்.5- சென்னையில் தமிழக முதல்வர் அணி மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி இடையே இன்று நடைபெற்ற நட்புறவு கிரிக்கெட் ஆட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தெற்கு ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தமிழக முதல்வர் அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
தமிழக முதல்வர் அணியின் கேப்டன் ஸ்டாலின் பந்துவீச்சில் தெற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக் ரேன் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின், அசோக் பொன்முடி, எல். சிவராமகிருஷ்ணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
"இத்தகைய போட்டிகள் மூலம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நட்புறவு மேம்படும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தவிர்கப்படவும் இவை உதவும். இதுபோன்ற நட்புறவு போட்டிகள் எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்" என்று போட்டி தொடங்கும் முன்னர் ஸ்டாலின் கூறினார்.
ஆட்ட நாயகன் விருது ஸ்டாலினுக்கும் அசோக் பொன்முடிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வரும் அந்த அணியின் கேப்டனுமான மைக் ரேன் வீசிய கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து தமிழக முதல்வர் அணி வெற்றி இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆஸி. அணியின் பிரைன் மேயஸ் மற்றும் ஜெர்விஸ்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்த கிரிக்கெட் போட்டியின் இடையே கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற தமிழக முதல்வர் அணிக்கு ஆளுநர் பர்னாலா பரிசுக் கோப்பை வழங்கினார்.
தமிழக முதல்வர் அணி வீரர்கள்:
ஸ்டாலின் (கேப்டன்)  - 2
பொன்முடி - 9
ஜித்தன் ரமேஷ் - 7
வெள்ளக்கோயில் சாமிநாதன் - 6
நடிகர் அரவிந்த் - 4
எஸ்.பி.பி. சரண் - 3
ரமணா - 0
துரைமுருகன்
ஸ்ரீகாந்த்
எல்.சிவராமகிணன்
என்.வெங்கட்ராகவன்
அசோக் பொன்முடி
நடிகர் பிரசன்னா
சாக்ஷி சிவா

கூடுதல் ரன்கள் - 8
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி வீரர்கள்:
மைக் ரேன் (கேப்டன்) - 0
ஏ.கே. தரீன் - 10
பீட்டர் வர்கீஸ் (இந்தியாவுக்கான தூதர்) - 5
பாப் போர்டு - 5
ஆர்ச்சி - 3
மார்க் - 2
டெர்ரி - 1
டேனி
பிரைன் மேயஸ்
துஷார் அகர்வால்
டோனி
மிக்லே
ஜெர்விஸ் 
கூடுதல் ரன்கள் - 5
கருத்துக்கள்

பணம் அல்லது பரிசு அல்லது விருந்து கொடுத்து பெற்ற வெற்றி யல்ல என்று நம்பலாம் அல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 8:26:00 PM
இங்கும் மேட்ச் fixingaa ? அட கடவுளே!
By sothu pandaram
9/5/2010 8:14:00 PM
Rangaraj. Yoy are absolutely correct.
By soranai
9/5/2010 8:10:00 PM
ANY MATCH FIXING ? BECAUSE DMK IS GOOD IN VOTE FIXING..
By rangaraj
9/5/2010 7:52:00 PM
Rajasji is 100% correct.
By Sundaram
9/5/2010 7:21:00 PM
கிறுக்குப் பயலுவ ! ஒருத்தனுக்கு கிறுக்குப் புடுச்சா கீழ்பாக்கத்துக்கு அனுப்பலாம் ! எல்லோருக்கும் கிறுக்குப் புடுச்சதால புழல் சிறையில தூக்கி போடுங்கடா !!! @ rajasji
By rajasji
9/5/2010 6:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக