புதன், 8 செப்டம்பர், 2010

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசரச் சட்டம்


சென்னை, செப். 7: தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.  இதன்படி தமிழக அரசின் நேரடி பணி நியமனங்களில் 20 சதவீத இடங்கள் தமிழில் படித்தவர்கள் மூலம் நிரப்பப்படும்.
கருத்துக்கள்

காலம் தாழ்த்தியாவது இச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்குப் பாராட்டுகள். 20 விழுக்காடு என்பதன் காரணம் ஒரு வேளை மொத்தக் கல்லூரி மாணாக்கர்களில் தமிழ் வழியாகப் பயில்பவர்கள் 20 விழுக்காட்டினர் எனக் கணக்கிட்டார்களா எனத் தெரியவில்லை. மேனிலைப்பள்ளி வரை தமிழில் பயில்பவர்கள் எண்ணிக்கையே மிகுதி. எனவே, பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சியையும் அதற்குக் குறைவான தேர்ச்சியையும் அடிப்படைக் கல்வித் தகுதியாக உள்ள பணிகளுக்கு 75 % விழுக்காடு முன்னுரிமை தரவேண்டும். பிற பணிகளில் 50 % முன்னுரிமை தர வேண்டும்.முழுமையான ஆணையைப் படித்தபின்புதான் பிற கருத்துகள் குறித்துக் கூற இயலும். 
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/8/2010 4:14:00 AM 


அவசர சட்டம் பிறப்பிப்பு 
 http://www.maalaimalar.com/2010/09/08050103/tamil-nadu-government-emergenc.html
மாலை முரசு : அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசு அவசர சட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக