வெள்ளி, 10 செப்டம்பர், 2010

மத்திய அரசு அலுவலகங்களில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை மறுப்பு: பாஜக கண்டனம்


சென்னை, செப். 9: விநாயகர் சதுர்த்தியன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் விநாயக சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மாநில மற்றும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல துறைகளில் விநாயகர் சதுர்த்தி நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 11) விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்துக்களின் உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

சமயச் சார்பான விடுமுறைகளை வழங்காதிருத்தலே நன்று. ஆங்கிலேயர அரசு எலியால் பரவும் நோய்களைத் தடுப்பதற்காக எலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது திலகர், எலி விநாயகர் வாகனம் எனக் கூறி அறிவியல் செய்கைக்குத் தடையாகப் புகுத்தியதே விநாயகர் ஊர்வலம்.எனவே, விடுமுறை விடாததுபோல் மாசுத் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தும் உருவங்களைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சிக்கும் தடை செய்ய வேண்டும். அவரவர் வீடுகளிலும் கோயில்களிலும் வழிபடும் உரிமை இருந்தால் போதும். இறை நெறிகளை வளர்க்க வேண்டும். மத வெறிகளைத் தடை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/10/2010 3:26:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக