புது தில்லி, செப்.6: அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அரிசி, கோதுமையை ஏழைகளுக்கு வழங்குவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.÷தில்லியில் தனது வீட்டில் பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் பேசிய அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.÷மத்திய அரசு கிடங்குகளில் பல லட்சம் டன் அரிசி, கோதுமை வீணாகிறது. இதை ஏழை மக்களுக்கு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு கடந்த மாதம் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், வீணாகும் அரிசி, கோதுமையை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கலாம் என்றனர்.÷ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு கூறிய நீதிபதிகள், அரசுக்கு ஆலோசனை அளிக்கவில்லை. தாங்கள் அளித்தது கட்டளை, இதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று கூறப்பட்டது.÷இதையடுத்து இலவசமாக வழங்குவது குறித்து கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.÷இதனிடையே பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசிய பிரதமர், அரசின் கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதாக இருக்காது என்றார். நாட்டின் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இதை எவ்விதம் இலவசமாக அளிக்க முடியும்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.÷அனைத்து ஏழை மக்களுக்கும் அரிசி, கோதுமையை இலவசமாக வழங்குவது எளிதான காரியமல்ல. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படிக்கவில்லை. இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் கரிசனம் நியாயமானது என்பதை உணர முடிகிறது.÷2004-ம் ஆண்டிலிருந்தே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. கட்டுபடியாகும் விலையில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை கிடைக்க வேண்டும் என்ற நீதிமன்ற கருத்தை ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ÷ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமையை வழங்கினால் அது விவசாயிகளை மன ரீதியில் பாதித்துவிடும். இதனால் விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டுவிடுவர் என்றார். கையிருப்பு ஒன்றும் இல்லாமலிருந்தால் பிறகு விநியோகிக்க ஏதுமில்லாத சூழல் ஏற்பட்டுவிடும் என்றார் மன்மோகன் சிங்.
கருத்துக்கள்
செயல்படுத்தும் முறைகளில் உள்ள முறைகேட்டிற்கு எதிராக நீதிமன்றம் கருத்து கூறலாம்; தண்டனை வழங்கலாம். ஆனால், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது மிகவும் தவறு. இப்படிப்பட்ட தலையீடுகளால்தான் தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் தமிழ் மக்கள் தங்கள் மொழியான தமிழில் வழிபாடு செய்யும் உரிமைக்கு எதிராக நடந்து கொண்டது. இது போல் பலவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அதே நேரம் அரசின் கொள்கை முடிவு மக்கள் நலனுக்கு எதிராக அமைந்தால் அது குறித்துத் தலையிடும் உரிமை நீதிமன்றங்களுக்கு உண்டு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2010 4:22:00 AM
9/7/2010 4:22:00 AM
தொலை தொடர்புத் துறையில் உலக மகா ஊழல் பணத்தை பிரித்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ..மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து விட்டால் கோர்ட் தலையிடக் கூடாது ! சுப்ரமணியசாமி மனு கொடுக்குறார் என்பதற்காக மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கக் கூடாது என்பதுதான் பிரபல பொருளாதார மேதை மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் பேட்டியின் சாரம் !!! @ rajasji
By rajasji
9/7/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
9/7/2010 1:37:00 AM