செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி


லண்டன், செப். 5: ஓரிடத்தில் முட்டை போட்டும் மற்றொரு இடத்தில் குட்டி போட்டும் இனவிருத்தி செய்யும் அதிசயவகை பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.÷பல்லி, பாம்பு போன்ற ஊர்வன வகைகளில் குட்டி போடும் வகைகளும் உள்ளன.  முட்டை போடும் வகைகளும் உள்ளன. ஆனால் ஒரே வகை பல்லி இனம் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் முட்டையிடுகிறது. அதுவே குளிர் மிகுந்த மலைப் பிரதேசத்தில் இனவிருத்தியில் ஈடுபடும்போது குட்டி போடுகிறது. இப்படி ஒரே இனம் ஓரிடத்தில் முட்டையும் மற்றொரு இடத்தில் குட்டியும் போடுவது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராட்ஸச பல்லி வகை நியூசெüத்வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் முட்டையிடுகிறது. ஆனால் அந்த வகை பல்லிகளே குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில் இனவிருத்தி செய்யும்போது குட்டிபோடுகின்றன. ஐரோப்பிய பல்லி உள்ளிட்ட மேலும் 2 வகை ஊர்வன இனம் இதுபோன்று குட்டியும் முட்டையும் போடும் தன்மை கொண்டவை. உயிரியல்துறை நிபுணர் ஜேம்ஸ் ஸ்ட்வார்ட் நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி சேனலில் இதை விவரித்துள்ளார். அந்தப் பல்லியின் கர்ப்பப் பை அமைப்பு மற்றும் அதில் நிகழும் ரசாயன மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக