திங்கள், 6 செப்டம்பர், 2010

இலங்கையில் இந்திய ராணுவ தலைமை தளபதி


கொழும்பு,செப்.5: இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த வி.கே. சிங் மற்றும் அவரது மனைவியை இலங்கை ராணுவ தலைமை தளபதி ஜெகத் ஜெயசூரியா வரவேற்றார். வி.கே. சிங், இலங்கைக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். அவரின் இந்த பயணத்தை இரு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றன. இப்பயணத்தின் மூலம் இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு ஆயத்தப்படுத்தும் பயணமாகவே வி.கே.சிங்கின் பயணம் கருதப்படுகிறது. வி.கே.சிங், இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, பிரதமர் ஜெயரத்னே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், ஆகியோரை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.  
கருத்துக்கள்

இரு நாடுகளின் படைத்துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்றால் தமிழர்கள் மேலும் அழிக்கப்படுவர் என்றுதானே பொருள். அந்தோ பரிதாபம் ஈழத்தமிழர்கள்@ அதனினும் பரிதாபம் கையறுநிலையில் உள்ள இந்தியத் தமிழர்கள்! தமிழர்க்கு ஒரு நீதி ஆரியரக்கு ஒரு நீதி என்ற அளவு கோல் கொண்டுள்ள இந்தியத்தால் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள இடர் பேரிடராகிறது. முதலில் இந்திய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தமிழக வரலாற்றைத் தொடக்கமாகக் கொண்ட உலக வரலாற்றைப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது வெளியுறவுக் கொள்கை சீர‌டையும். தமிழர்களு்க்கு விடிவு பிறக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக