கொழும்பு, செப்.6- தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளது. ஆனால், இதற்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்த இது சரியான நேரம் அல்ல. இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறது. எனவே, மாநாடு பிரச்னைக்குரிய விவகாரமாக மாறிவிடும்." என்று சிவத்தம்பி கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
மாநாட்டின் நோக்கம் தமிழ் எழுத்தாளர்களைக் கூட்டுவிப்பதல்ல; இலங்கையை அமைதிப் பூங்காவாகக் காட்டவும் தமிழ்க்காவலர்களைக் கொலைகாரர்களாகத் திரிக்கவும் சிங்களக்கைக்கூலிகளால் நடத்தப்படுவது. அவ்வாறிருக்க அங்கு அந்த மாநாடு நடைபெறக்கூடாது ; சென்னையில் நடைபெறலாம் என அறிஞர் சிவத்தம்பி கூறுவதன் நோக்கம் செம்மொழி மாநாட்டின் பங்கேற்பால் ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கவும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் நடத்தச் சொல்வதன் மூலம் இனப்படுகொலையின் பங்களிப்பை மறைத்து ஆதாயம் பெறவும் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. தமிழ் வளர்ச்சிதான் மாநாட்டின் நோக்கம் எனில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற வேண்டிய இடம் தமிழர் எழுச்சித் தலைவர் தன்மானத் தங்கம் துணை முதல்வர் மாண்புமிகு இராமசாமி இருக்கும் பினாங்கு மாநிலம்தான். அவ்வாறு அவர்கள் நடத்தாவிட்டால் இது தமிழ்ப்பகைவர்கள் மாநாடு என்பது உறுதி. இச்சூழலில், பினாங்கில் தமிழர் தாயக மலர்ச்சி மாநாடு நடத்தப் பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:27:00 PM
9/6/2010 6:27:00 PM
IF SRI LANKA IS A KILLER'S LAND, DOES NOT INDIA A TRAITORS' LAN? DOES SIVATHAMBI HAS ANY GENUINE RIGHT TO SPEAK ABOUT TAMIL? LET HIS CONSCIENCE ANSWER.
By karunakaran
9/6/2010 4:52:00 PM
9/6/2010 4:52:00 PM
IT IS TRUE THAT THIS CONFERENCE SHOULD NOT BE HELD IN THE KILLER'S LAND.
By Paris EJILAN
9/6/2010 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/6/2010 4:15:00 PM
கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு; சென்னையில் நடத்த கோரிக்கை
(தமிழ்ப்பகைவர்கள் சிலர் வேண்டுமென்றே தாய்நிலக்காவலர்களை இழிவுபடுத்தி எழுதி வருகின்றனர். போகட்டும்! அறியாப் பாவிகள்!)