செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மத்தியப் பிரதேசத்தில் ஏழைகளுக்கு ரூ. 5-க்கு இரவு உணவு


போபால், செப். 6: மத்தியப் பிரதேசத்தில் அரசின் இரவு நேர காப்பகங்களில் தங்குவோருக்கு ரூ.5-க்கு இரவு உணவை அளிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.÷ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த தினமான செப்டம்பர் 25-ல் இருந்து இத் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.÷இத் திட்டம் முதல் கட்டமாக போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் ஆகிய 4 நகரங்களில் உள்ள இரவு நேர காப்பகங்களில் செயல்படுத்தப்படும். இதில் தங்கும் 1200 பேருக்கு ரூ.5-க்கு இரவு உணவு அளிக்கப்படும் என்று மாநில நகர நிர்வாக மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாபுலால் கெüர் தெரிவித்தார்.  இத் திட்டம் மூலம் ஒவ்வொருவருக்கும் 6 சப்பாத்தி, ஊறுகாய் மற்றும் பொரியல் வழங்கப்படும். இந்த உணவு தரமானதாக இருக்கும்.÷அடுத்த கட்டமாக இத் திட்டம் மேலும் 10 சிறிய நகரங்களில் உள்ள இரவு நேர காப்பகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்துக்கள்

நல்ல திட்டம் . பாராட்டுகள். நாடு முழுமையும் பின்பற்றலாம். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2010 4:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக