திங்கள், 6 செப்டம்பர், 2010

இராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று முகநூலில் நான் ஒரு மறுமொழி அளித்திருந்தேன்>>

வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு  தொடர் அதன் சூழலை ப் புரிந்து  கொள்ளாமல் பலராலும் தவறாகவே எடுத்தாளப்படுகிறது.

நாட்டை இராமன் ( போன்றவர்கள்) ஆள வேண்டும் என்னும் பொருளிலேய‌ே அனை வரும் கையாளும் பொழுது  இராவணன்  (‌ போன்ற மண்ணின் மைந்தர்கள்) ஆள வேண்டும் என்னும் இனஉணர்வு வேண்டும் என்னும் பொருள்பட  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தம்முட ய துரத்தப்பட்டேன் பாவியத்தில் குறிப்பிட்டிருப்பார். 

இவ்வாறு. நம் நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன என்று கவலை யற்று இருக்கக் கூடாது என்னும்  நோக்கத்திலேயே நாம் பார்க்கின்றோம்.   ஆனால் அடுத்தவர் நாட்டு உட் சிக்கல்களில் தலையிடாமை வேண்டும் என்னும் பொருளில்தான் இத் தொடர் கூறப்படுகிறது.

இத் தொடர்   சுக்கரீவன்படைகளால்   அப்படை இராவணனால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்படும் பொழுது நமக்கு உரிமை யல்லாத இலங்கையை அம் மண்ணிற்குரிய  இராவணன் ஆண்டால் என்ன? அதனைக் கவர எண்ணும்  இராமன் ஆண்டால் நமக்கு என்ன?   நாம் ஏன் உயிரைக் கொடுக்க வேண்டும் ?  என்பதாகச்  சொல்லப்பட்ட ‌தாகும்். 
இந்திய அரசும் தனக்கு உரிமையல்லாத  இலங்கையின் நலனில்,  ஓர வஞ்சனையுடன் கருத்து  செலுத்துவது போல் நடித்து இனப் படுகொலைகளுக்குத் துணை புரிவதற்கு மாற்றாக, ஒதுங்கியிருந்தது என்றால்   எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? காலம் இன்னும் உள்ளது. இனியேனும் இந்தியா ஒதுங்கியிருந்தால் நன்றே!

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக