வெள்ளி, 11 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகள்
உறுதி செய்யப்பட வேண்டும்:
ராகுல்சென்னை, செப். 10 ""இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்'' என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியின் விவரம்:
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை பற்றி, காங்கிரஸ் கட்சியின் கருத்தை பல முறை தெரிவித்துள்ளேன். தமிழக மக்களின் நலனில் எங்களது குடும்பம் எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. இலங்கை பிரச்னை குறித்து அந்த நாட்டு அரசுடன் பேச, மத்திய அரசின் தூதுவர்களாக வெளியுறவு அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகக் கூறுவது தவறு. இந்தப் பிரச்னையில் இலங்கை அரசுக்கு எந்த அளவுக்கு நிர்பந்தத்தைக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதில், எந்த சந்தேகமும் இல்லை'' என்றார் ராகுல் காந்தி.

கருத்துக்கள்

பாதி உண்மை பொய்யை விட ஆபத்தானது. இராகுல் கூறுவது போல் இலங்கைக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டவர்கள் தமிழர் நலன் காக்கவா அனுப்பப்பட்டனர். உரிமை கேட்பவர்களைக் கூண்டோடு அழித்து விட்டால் எஞ்சியவர்கள் உரிமை கேட்காமல் அடங்கி இருப்பார்கள் என்னும் வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்ற, நவீனப் படைக் கருவிகளை வழங்கிக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்க, ஈழத் தமிழர்களின் காவல் தெய்வமாக விளங்கும் விடுதலைப் போராளிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்க, விடுதலைப் படையினருக்குச் செல்லும் ஆயுத, உணவுக் கப்பல்களை வழி மறிக்கவும் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுக்கவும் வேவுபார்க்க, என அடுக்கிக் கொண்டே போகலாம். சாத்தான் வேதம் ஓதுவதற்கு எடுத்துக் காட்டாக ஏதோ பேசுகிறார். ஆனால், ஒரு கட்சித் தலைவருக்கு மாணாக்கர்களைத் திரட்டி 3 மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்து கட்சி அமைப்பு போல் செயல்பட்ட பல்கலைக் கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் நடுநிலையாளர்கள் போராடக் கூடாது?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2009 2:22:00 AM

NANPARKALE VANAKKAM.NALLADU NATAKKUM, KAVALAIPATATHIRKAL.ILAGNARAKA IRUKKIRAR ETHAVADU ORU VAGAIL SATHIPPAR ENTRU NAMPUVOM NAAN ENTHA KATCIYAIYUM SARATHAVAN.NAANUM EZHATHAMIZHARKALIN DUNPATHAI ARINTHAVAN THAN.ATHANAL ENIMEL NALLADE NATAKKA VENDUM ENTRU IRAIVANAI PIRARTHIPPOM.NANTRI.BY R.RAJESHKANNAN TANJAI DUBAILIRUNDU....

By RAJESH.R
9/10/2009 11:50:00 PM

Saathaan vedham odhukirathu.

By VENDHAN
9/10/2009 10:53:00 PM

இங்கு திரு.ராகுல் காந்தி-க்கு எதிராகவும் ஈழ தமிழர்க்கு ஆதரவாகவும் எழுதப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நன்றி. இன்று மாலை திரு.ராஜிவ் இங்கு கோவைக்கு வந்திருந்தார். சாலைகளில் அவரது உருவம் கொண்ட தட்டிகள் விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலையில் iவழிநெடுக அவரது கட்ச்சியினரால் அவர்களுடைய உறவையும் சேர்த்து வைக்கப்படிருந்தன. கொஞ்சம் கூட ஒரு கம்பீரம் இல்லாத வயதான தோற்றமுடையவராக தெரிந்தது! படுகொலை செய்யப்பட்ட திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனோடு ஒப்பிடும்போது திரு.ராகுல் ஒரு தலைவராகவே தெரியவில்லை. இவர் ஈழ தமிழர்க்காக ஆதரவு சொல்வது வெறும் ஒப்புக்கு சொல்லப்படுபவையே. நேஞ்சில் கொஞ்சமும் இரக்கமின்றி ஈழ தமிழர்களின் ஒரு ஒப்பற்ற தலைவனையும் அவரது வீரர்களையும் கொன்றொழிக்க சிங்கள அரசிற்கு எல்ல உதவிகளையும் செய்துள்ள திரு.ராகுலின் கட்சி தமிழ் மண்ணில் வளரவே கூடாது. ஆயினும் அடிவருடிகளும் சினிமாக்காரர்களும் ( விஜய், பிரபு. ரஜனி போன்ற சுயனலக்கார்களும் அவரது கட்ச்சியில் சேர வாய்ப்பு உள்ளது! தமிழர்கள் மித கவனாகமாக இருக்கவேண்டிய வேளை இது. தமிழர் வரலாறு ஒரு மோசமான் நிலையை அடைந்துள்ளதை கவலயுடன் கவனிக்கிறேன் . பணத்துக்கு வா

By P.Padmanaabhan
9/10/2009 10:21:00 PM

We lost thousands of our innocent and poor compatriots in Ezham because of the vengence of your family. Get your ass out of our Thamizh Nadu.

By Raja
9/10/2009 9:43:00 PM

Now there is nothing that he can do for Tamils. All that he and his family could do for tamils have been done for over years. Tamils will take care of themselves. Tamils will always remember what his family has done or not done for Tamils.

By NRIguest
9/10/2009 9:34:00 PM

ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகள் உங்கள் பின்னால் வரலாம். அதனால் உங்களுக்கு பயன் இல்லை. நீங்கள் வந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், வேறு ஊரைப் பாருங்கள்; கல்லா நிரம்பும்.

By Murugadoss K
9/10/2009 8:16:00 PM

ராகுல், இலங்கைத் தமிழனோ, இந்தியத் தமிழனோ, அவர்கள் கிடக்கிறார்கள் விடுங்கள். தமிழர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்வார்கள். உங்களைப் போன்றோர் மூக்கை நுழைக்காமல், அடக்கி வைத்தால் போதும். உங்களிடம் சில கேள்விகள். நீங்கள் எதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். "நம் நாட்டுக்கு நன்மை செய்ய" என்று மட்டும் சொல்லாதீர்கள். இந்த வார்த்தையை எல்லோரிடமும் கேட்டுக் கேட்டு என் காதில் இரத்தம் வழிகிறது. நன்மை செய்ய அரசியலிலோ, கட்சியிலோ இருக்க வேண்டிய தேவை இல்லை. இரண்டாவது, எந்த தகுதியில் வந்தீர்கள்? நேருவின் குடும்பம் என்ற ஒரே தகுதியா? மூன்றாவது, ஒரு அரசியல் தலைவராக, சுவிஸ் வங்கியில் உள்ள நம் நாட்டுத் தலைவர்களின்(தறுதலைகளின்) பணத்தை என்ன செய்ய உத்தேசம். அத்வானி அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அதை வெளிக்கொணர்வோம் என்றார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழர்கள் நாடகங்களைப் பார்த்துப் பார்த்து புளித்துப் போய், சினிமா வரை வந்துவிட்டார்கள். நீங்கள் காலாவதியான விஷயத்தைக் கையிலெடுத்து, நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகள் உங்கள் பின்னால் வரலாம். அதனால் பயன்

By Murugadoss K
9/10/2009 8:12:00 PM

பேச்சோடு நின்றுவிடாம‌ல் கொஞ்ச‌மாவ‌து செய‌லில் காட்டுங்க‌ள் அப்பாவிக‌ள் முள்வேலியின் உள்ளே வாழ்கிறார்க‌ள் என்ப‌தைவிட‌ நித்த‌ம் நித்த‌ம் செத்து பிழைக்கிறார்க‌ள். ஆஸ்த்ரேலியாவில் லூட்டிய‌டிக்கும் மான‌வ‌னுக்காக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் ம‌த்திய‌ அர‌சு இந்திய‌ வ‌ம்சாவ‌ளியின‌ர் ஒரு ச‌மூக‌மே ச‌ந்தியிலே நிற்ப‌தை பாராமுக‌மாக‌ நிற்ப‌து ஏன் ? எங்க‌ளின் வ‌ரிபன‌திலேயும்தான் ம‌த்தியர‌சு இய‌ங்குகிற்து ஆக‌வே எங்க‌ளின் வ‌ம்ச‌ம் வாழ‌ ந‌ட‌வ‌டிக‌கை எடுக்க‌வேன்டிய‌து உங்க‌ளின் க‌ட‌மை. புலிக‌ள் வேன்டுமானால் அம்புக‌ளாக‌ இருந்திருக்க‌லாம் ஆனால் எய்த‌வ‌ன் யாரென்று க‌ன்டிப்பாக‌ உங்க‌ளுக்கும் உங்க‌ளின் அன்னைக்கும் ந‌ன்றாக‌ தெரிந்திருக்கும். ம‌துரைவ‌ரை வ‌ந்த‌ நீங்க‌ள் சு.சாமியை பார்த்து விட்டு போயிருக்க‌ளாம் ப‌ல‌ உன்மைக‌ள் அவ‌ருக்கு தெரிந்த்டிருக்கும் நீங்க‌ளும் கேட்டுபார்த்திருக்க‌ளாம். எம்.ஜெ.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
9/10/2009 7:38:00 PM

Hello Rahul gi,how u speak like this...Congress only send soldiers to kill tamilans in srilanka...now you speak about the rights of srilankan tamilians....wat ever u speak,congress wont come in tamil nadu...no political parties in india to fight against the srilankan govt...

By venky thanjai
9/10/2009 7:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக