செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷியா), செப். 6: ரஷியாவில் பள்ளி மாணவர்கள் ஹிந்தி மொழியில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
ரஷியாவிற்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதிபா பாட்டீல் சனிக்கிழமை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஹிந்தி மொழி, இந்திய இசை மற்றும் பரத நாட்டியம் கற்றுத்தரும் ரஷியப் பள்ளிக்குச் சென்றார்.
அப்பள்ளி மாணவர்கள் ஹிந்தி மொழியில் அனைத்துக் கலைநிகழ்ச்சிகளையும் நடத்திக்காட்டினர். பரத நாட்டியத்துடன் ஆரம்பித்து ஹிந்தியில் பாட்டு முதல் ராஜஸ்தான் கிராமிய நடனம் வரை இந்தியக் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினர்.
இதைக் கண்டு மிகவும் மகிழ்வுற்ற பிரதிபா பாட்டீல் கூறியதாவது:
இப்பள்ளி மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகள் இந்தியா, ரஷியாவிற்கிடையேயான நட்புறவை பிரதிபலிப்பதாக உள்ளது.
1957ல் இந்தியாவின் 10-வது சுதந்திர தினத்தன்று நிறுவப்பட்ட இப்பள்ளி இன்றுவரை இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வரும் நல்லுறவின் சின்னமாக விளங்குகிறது.
இந்திய நாடு ரஷியாவை எப்பொழுதும் தன் உண்மையான நண்பனாகத்தான் கருதுகிறது என்றார் பிரதிபா பாட்டீல்.
மாணவர்களைப் பாராட்டும் விதமாக அப்பள்ளிக்கு புத்தகங்கள், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் டிஜிடல் புரஜெக்டர் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்தார் பிரதிபா பாட்டீல்.
இந்தியா என்றால் 'இந்தி'யா என இந்தி மொழி மட்டுமே இங்கு இருப்பதாக இந்தியா செய்து வரும் முயற்சிகளுள் இதுவும் ஒன்று. தமிழ் என்று ஒப்புக்கு அழுபவர்கள் எல்லா நாடுகளிலும் தமிழின் தொன்மையையும சிறப்பையும் தமிழ்க் கலைகளையும் பரப்ப வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Even in Tamil films, other country people dance to tunes, if paid.
9/7/2009 1:03:00 AM