சென்னை, செப். 7: இலங்கையில் முள் கம்பி வேலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற அரசினர் கவின் கலை கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம்:
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வந்த சண்டை முடிவடைந்த நிலையில், தங்கள் வீடுகளை இழந்தத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானத் தமிழர்கள் முள்கம்பி வேலிகளுக்குள் ராணுவ கண்காணிப்பில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவரவர் சொந்த பகுதிகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சென்னையில் உள்ள அரசினர் கவின் கலை கல்லூரி மாணவர்கள் அறிவித்திருந்தனர். இதற்கு போலீஸôர் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தங்களது கல்லூரி வாயிலில் பாண்டியன் என்பவர் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்க திங்கள்கிழமை காலையில் முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்த பெரியமேடு போலீஸôர், அனுமதி இன்றி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக மாணவர்கள் 15 பேரை கைது செய்தனர்.
மக்கள் தங்கள் உணர்வுகளை அமைதியான முறையில் வெளிப்படுத்த வழிவிடவேண்டுமேயன்றி இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்பது போன்று அடாவடி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாணாக்கரக்ளை அடக்குவது என்பது அரசு தன் தலையில் தானே தீயை அள்ளிக் கொட்டிக் கொள்வது போன்றது. எனவே மனித நேய உணர்வுகளை அடக்குவதைவிட ஆர்ப்பாட்ட வடிகால்களுக்கு வழிவிடுவதே சாலச் சிறந்தது. மாணாக்கர்கள் போராட்டம் வெல்க! தமிழ் ஈழம் தழைக்கட்டும்! உலக - ஈழ உறவு மலரட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
9/8/2009 4:45:00 AM