திங்கள், 7 செப்டம்பர், 2009

"இலங்கைத் தமிழர்கள் இன்னல் தீர
தமிழக முதல்வர் தலைமையில் கூடுவோம்'



சென்னை, செப். 6: இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சியினரும் தலைமைச் செயலகத்தில் கூடி முடிவெடுப்போம் என்று இ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களின் பிரச்னை தீர தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை மறந்து தீர்வு காண வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்.
இலங்கையில் தமிழர்கள் இழந்த தமிழ் மாநிலத்தை, குடியிருப்புகளை, விவசாய நிலங்களை, தொழிற்பேட்டைகளை, இறைவழிபாட்டுத் தலங்களை மீண்டும் தமிழ் மக்களை பெறுகின்ற நிலையைக் கொண்டு வர வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை இலங்கைத் தமிழர்களுக்கு பெற்றுத் தருவது மட்டுமே தமிழ் இனத்தினுடைய திட்டமாக இருக்க வேண்டும்.
இதைச் செயல்படுத்த தமிழகத்தினுடைய மூத்தத் தலைவரான முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சியினரும் தலைமைச் செயலகத்தில் கூடி முடிவெடுக்கும் நேரமிது. இதில் குறுகியகால அரசியல் லாபத்துக்கு இடமளிக்கக் கூடாது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், இளைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். தேர்தல் காலத்திலும் இதை வலியுறுத்தியுள்ளனர்.
நமக்குள்ளே ஒருவரை ஒருவர் வசைபாடுவதும், குறை கூறுவதும் துன்பப்பட்டுக் கிடக்கிற லட்சக்கணக்கான தமிழர்களை அலட்சியப்படுத்துவதாகும் என்று கூறியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.


கருத்துக்கள்

இலங்கைத் தமிழர்களின் தேவையை ஓரளவு சரியாகச் சொன்னாலும் கொலைகாரக் கும்பல்களைப் போற்றுவதன் மூலம் அவர்கள் மீதான பழியைப் போக்க எண்ணுகிறாரா? பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்பொழுது சிலர் துதிபாடிக் கொண்டிருந்தாலும் ஈழத்தமிழர்கள் படுகொலை தொடர்பாக வரலாறு என்றென்றைக்கும் இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைகாரர்களையும் உரிய அவ முத்திரைகளுடன்தான் பதிந்து வருங்காலத்தவருக்குக் காட்டும். சேக்சுபியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது. மனித நேயர்களும் ஈழத் தமிழர்களின் நலம் நாடுநர்களும் கொலைகாரக் கும்பல்களையும அவர்களின் ஆதரவாளர்களையும் விலக்கி வைத்துவிட்டு ஒன்று கூடிச் செயலாற்றுக! வெல்க தமிழ ஈழம்! வளர்க ஈழ-உலக நடபுறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2009 3:04:00 AM

"கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்." For 45 years, congress appointed none or max two ministers from congress, even though when you horse rided and got 40 Tamil MPs support. Only past 10yrs, since you can't have majority of your own, you grouped some traitors giving minister posts. After joining your alliance or party, all of them become zeros. Still we need to see the CM big zero, where is it is going to follow. What can we expect from the zeros, who don't even raise the voice against corruption, anti-people activities, TN fishermen killings, SL Tamil massacres..

By keeran
9/7/2009 12:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக