செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பொது நிகழ்ச்சிகளில் பிற கட்சியினருடன் பங்கேற்பதை
அ.தி.மு.க. விரும்பவில்லை:
கருணாநிதி ஆதங்கம்



சென்னை, செப். 7: அரசியல் மாறுபாடுகளைக் கடந்து பொது நிகழ்ச்சிகளில் அனைவரோடும் சேர்ந்து பங்கேற்பதை அ.தி.மு.க. விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் மகன் செல்வேந்திரனுக்கும், நெல்லை மாவட்டம் இலஞ்சியைச் சேர்ந்த மோகன் மகள் ராஜராஜேஸ்வரிக்கும் சென்னையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அத்திருமணத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் என். வரதராஜன், ""அரசியல் மாறுபாடுகளைக் கடந்து பொது நிகழ்ச்சிகளில் அனைத்துக் கட்சியினரும் நட்புணர்வோடு பங்கேற்கும் பண்பாடு தமிழகத்தில் மீண்டும் உருவாக வேண்டும். அதற்கு தி.மு.க.வும் தமது பங்கை ஆற்ற வேண்டும்'' என வலியுறுத்தினார்.
அதன் பிறகு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இடையே வேறுபாடு, மாறுபாடாக மாறி, நேரில் பார்த்தால் பேசிக் கொள்வது தவறு; ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் இன்னொருவர் கலந்து கொள்வது தவறு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.வைப் பொருத்தவரை எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளை மதித்தோம்; ஜனநாயகத்தை மதித்தோம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின், பதவி ஏற்பு விழா நடைபெற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அன்பழகனும், சென்னை மாநகர மேயர் என்ற முறையில் மு.க. ஸ்டாலினும் அந்த விழாவுக்கு சென்றனர். ஆனால் அவர்களை "வா' என்று அழைக்கக்கூட ஆளில்லை. அந்த விழாவில் 17-வது வரிசையில் அன்பழகனும், அதற்கு அடுத்த வரிசையில் ஸ்டாலினும் உட்கார வைக்கப்பட்டனர். அதற்கு பிறகுதான், இனி இதுபோன்ற விழாக்களுக்கு செல்ல வேண்டுமா என நினைக்கும் நிலை தி.மு.க.வுக்கு ஏற்பட்டது.
மேலும் புயல், மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பது குறித்தும், இலங்கைத் தமிழர்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்தும் ஆராய தமிழக அரசினால் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் எல்லா கட்சிகளும் கலந்து கொண்டன. ஆனால் அ.தி.மு.க. மட்டும் புறக்கணித்தது. அதோடு மட்டுமின்றி, இந்த கூட்டங்களே "கபட நாடகம்' என விமர்சித்தார்கள். பொது நிகழ்ச்சிகளில் எல்லா கட்சிகளுடனும் சேர்ந்து பங்கேற்க வேண்டும் என்பதை தி.மு.க. ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு, செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சியிடமிருந்து அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லை என்றார் கருணாநிதி.
திருமண நிகழ்ச்சியில் கேரள சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆந்திர மேலவைத் தலைவர் சக்கரபாணி, தமிழக அமைச்சர்கள் க. அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளான கே.வீ. தங்கபாலு, டி. சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் வை. சிவபுண்ணியம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.


கருத்துக்கள்

சந்தானம் சொல்வது சரிதான். அதிமுக இரங்கல் நிகழ்ச்சியிலாவது திமுகவினர் பங்கேற்க முடியுமா? ஊருக்குத்தான் அறிவுரை. இவ்வாறு அறிவுரை கூறுவதால் தான் சிறந்த நிலையில் இருப்பதாகக் காட்ட முயல்வதை மக்கள் புரிந்து கொள்வார்கள். திரு பழ. கருப்பையா வின் நூலை வைகோ வெளியிடும் இலக்கிய நிகழ்ச்சிக்குத் திமுக வினரை அல்ல அதன் சார்பாக இருக்கும் ஔவை நடராசன் அவர்களைக் கூடப் பங்கேற்க விடவில்லை. இத்தகைய 'பண்பாட்டுடன்' இருந்து கொண்டு ஊருக்கு அறிவுரை கூறி என்ன பயன்? முன் மாதிரியாக விளங்கி அடுத்தவரை வழி நடத்த வேண்டுமேயன்றிப் போலியான அறிவுரைகள் வழங்கக் கூடா.

அரசியல் பண்பாட்டை விரும்பும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/8/2009 4:56:00 AM

He has the knack of throwing the balls in others court always and making others believe it. Really gifted.

By santanam
9/8/2009 4:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    பதிலளிநீக்கு