புதன், 9 செப்டம்பர், 2009

நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு
பிரசுரித்த திகதி : 08 Sep 2009

நோர்வே நாட்டில் செயல்பட்டு வரும் சிவப்புக் கட்சி தாம் தமிழீழக் கோட்பாட்டிற்கு வெளிப்படையாக ஆதரவு தரும் என தெரிவித்துள்ளது. பல புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பல அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அக்கட்சிகள் இதுவரை கூறாத ஒன்றை நோர்வே நாட்டில் இயங்கி வரும் இந்த அரசியல் கட்சி தெரிவித்துள்ளது. இக்கட்சியானது வெளிப்படையாகத் தாம் தமிழீழக் கோட்பாட்டை அங்கீகரிப்பதாகக் கூறியிருப்பது நல்லதொரு முன்னுதாரணம்.

ஏனைய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் இதைப் பின்பற்றும் என்பதில் ஐயமில்லை. வருகின்ற நோர்வே இடைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள இக்கட்சி மேலும் குறிப்பிடுகையில், தமது வேட்பாளர்களுக்கு இலங்கைத் தமிழர்களும் வாக்களித்தால் தாம் வெற்றிபெறுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டில் வசிக்கும் தமிழர்களில் சுமார் 8000 த்திற்கும் அதிகமானேர் வாக்குப் போடத் தகுதியுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இக்கட்சிக்கு வாக்களித்தால் குறைந்த பட்சம் 3 எம்.பிக்கள் ஆவது பாராளுமன்றம் செல்ல வாய்ப்பிருக்கிறது.

மற்றைய அரசியல் கட்சிகளை புறந்தள்ளி எவ்வாறு ஒரு அரசியல் கட்சிக்கு தாம் அதரவை வழங்குவது என்ற குழப்பத்தில் நோர்வே தமிழ் மக்கள் காணப்பட்டனர். இருப்பினும் தற்போது சிவப்புக் கட்சி தாம் தமிழீழக் கோட்பாட்டை நேரடியாகவே அதரிக்கும் என்று அறிவித்தல் விட்டுள்ளதால், அனைத்துத் தமிழர்களும் இனி இக் கட்சிக்கே வாக்களிப்பர் என நோர்வே தமிழர்கள் தெரிவித்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் தமிழீழம் காண்பதே இறுதி நோக்கம் என்று செயல்படும் அனைத்து நோர்வே தமிழர்களும் ஒன்றுசேர வேண்டும், தமிழர்களின் பலம் உலகறியச் செய்யவேண்டும் என்பதே எமது கடமையும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக