திங்கள், 7 செப்டம்பர், 2009

ஐ.நா. அதிகாரி வெளியேற இலங்கை உத்தரவுகொழும்பு, செப். 6: இலங்கையில் உள்ள ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பிற்கான மூத்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஞாயிற்றுக்கிழமை இலங்கை அரசு உத்தரவிட்டது
இலங்கையில் செயல்பட்டுவரும் ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் அலுவலக மூத்த அதிகாரி ஜேம்ஸ் எல்டர், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.நா.குழந்தைகளின் அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றிய ஜேம்ஸ், இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் பிடிபட்ட சிறார்களைப் பற்றி ஊடகங்களில் பேசினார். அச்சிறுவர்களின் வாழ்வுரிமைக்கும் குரல் கொடுத்தார். ஜேம்ஸின் இந்தப் போக்கை விரும்பாத இலங்கை அரசு அவருடைய விசாவை ரத்து செய்து நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்கள்

எல்லா நாடுகளிலிருந்தும் இலங்கைத் தூதர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2009 3:21:00 AM

By asking an UN official to vacate, Srilanka tries to hide to the outside world even the massacres of Tamil children in Srilanka. Shame on humanity inflicted by Srilanka and its supporters.

By humanrts
9/7/2009 12:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக