world semmozhi tamil maanaadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
world semmozhi tamil maanaadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஏப்ரல், 2010

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (1876-1954) சொற்பொழிவுகளும், உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூல் வடிவம் பெற்றன. உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி... கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்.கதராடை மற்றும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வையும் பரப்பினார். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தினார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார். அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்துள்ள பாவலரின் பெருமை தமிழின் பெருமையாகவே உள்ளது.


உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை.
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.


செவ்வாய், 30 மார்ச், 2010

செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி



மதுரை,மார்ச் 29:​கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ள தமிழக முதல்வருக்கு காரைக்குடி கம்பன் கழகம் நன்றியும்,​​ பாராட்டும் தெரிவித்துள்ளது.​ காரைக்குடியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 72-வது ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழாவில்,​​ கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ​ கம்பனுக்கு தனி அரங்கு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்த வேண்டுகோளை தமிழக முதல்வர் ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு என தனி அரங்கம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.இந்தச் செய்தியை காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் ​(மார்ச் 29) கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் தெரிவித்தார்.அத்துடன்,​​ மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம் அமைக்க உறுதியளித்த தமிழக முதல்வருக்கு பழ.​ பழனியப்பன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.இத்தகவலைக் கேட்டவுடன்,​​ விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறிஞர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கருத்துக்கள்

அப்படிப்போடு அரிவாளை! கம்பரின் அன்பர்கள் கோரிக்கை கருத்தரங்க அமர்வுப் பொருண்மைகளில் கம்பர் சேர்க்க வேண்டும் என்பது. பூம்புகார்கள் படைத்த கம்பர் தமிழ்மானச் செம்மல் இளங்கோ அடிகளுக்குத் தனி அமர்வு வைக்காமல் தன் புலமைச் சிறப்பை ஆரிய விதைப்பிற்குப் பயன்படுத்திய கம்பருக்குத் தனி அமர்வு வைத்தால் முறையாகுமா? எனவே, கலைஞ்ர் தனக்கே உரிய சூழ்வினை அறிவுடன் கருத்தரங்கங்கள் நடைபெறும் கூடங்களில் ஒன்றிற்குக் கம்பர் பெயரைச் சூட்டி விட்டார். கம்பர் அன்பர்கள் இதிலேயே நிறைவுகாண வேண்டும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் எனச் செயல்பட்டுள்ள முதலவர் முத்தமிழறிஞருக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 14 மார்ச், 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பக்தி அரங்கு தொடங்க வேண்டும்: ராம. கோபாலன்



செஞ்சி, மார்ச் 13: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பக்தி அரங்கு தொடங்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கூறினார்.÷செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி விழிப்புணர்வு மாநாட்டில் அவர் பேசியது:÷சேது சமுத்திர திட்டம் லட்சக்கணக்கான மீனவர்களை பாதிப்புக்குள்ளாக்கும். கால்வாயில் அடிக்கடி மண் விழும், அதனால் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.÷உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பக்தி அரங்கு தொடங்க வேண்டும். ஆன்மிக மடாதிபதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். இது குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆலோசனை செய்வதாக பதில் அனுப்பி உள்ளார். இம் மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று வருகிறது.÷சமச்சீர் கல்வியில் ஆன்மிகமும் இருக்க வேண்டும். கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை உள்ளிட்ட பகுதிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ÷மசூதி, சர்ச் அரசு கையில் இல்லை. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு இந்துக்களின் கோயில்கள் மட்டும் ஏன் அறநிலையத் துறையின் கீழ் செயல்பட வேண்டும் என்றார் ராம.கோபாலன்.
கருத்துக்கள்

தேவார திருவாசகம் முதலானவை பற்றிய ஆய்வுகள் இறைநெறி என்றும் செயேந்திர, நித்யானந்த,தேவநாதக் காமுகத் தத்துவங்கள் ஆன்மிக நெறி என்றும் பாகுபடுத்திப் பேசுகிறார் போலும். காமுகச் சாமியாருக்குத் துணை நிற்கும் இந்துசமயப் பகையாளி இராம.கோபாலனைக் கண்டிக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 6:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 7 மார்ச், 2010

செம்மொழி மாநாடு: "விக்கிபீடியா' தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி



தமிழ் இணைய மாநாட்டில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் ஆய்வரங்கத்தைப் போல, இணைய மாநாட்டிலும் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.இதுதவிர கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதுபற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுவிதப் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகிறது. ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.போட்டி குறித்து இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ப.வி.ச.டேவிதார் கூறியதாவது:கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடைத் துறை, விளையாட்டு துறை என 7 வகை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.இணையதளத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போட்டி வழி செய்கிறது."விக்கிபீடியா' தமிழ் இணையதளம்: எந்தவொரு தகவலையும் "விக்கிபீடியா' இணையதளத்தின் மூலம் பார்த்துவிட முடியும். இந்த இணையதளத்தில், ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.ஆனால், "விக்கிபீடியா' தமிழ் இணையதளத்தில் வெறும் 22,000 கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரித்தால்தான் இணையதளத்தில் தமிழின் பயன்பாடு அதிகமாகும். ÷அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்காகப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாணவர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.இந்தக் கட்டுரைகள் அனைத்தும் "விக்கிபீடியா' தமிழ் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.கட்டுரைகளை "யுனிகோட்' முறையில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். போட்டி அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் மாணவர் பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

திங்கள், 1 மார்ச், 2010

செம்மொழி மாநாடு: மலிவு விலையில் நூல்கள் விற்கப்படுமா?



கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலிவு விலையில் செம்மொழி இலக்கிய நூல்கள் விற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய நிலையில், பல்வேறு துறைகளில் தமிழைப் புகுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அந்தந்தத் துறை தொடர்பான கருத்துகள், படைப்பாளிகளின் அறிவுக் களஞ்சியங்கள் புத்தக வடிவில் தமிழில் செம்மையாக வரும்போது மொழியானது வளர்ச்சியடைகிறது. இதன் மூலம் கடந்த கால வரலாற்று நிகழ்வுகள், ஒவ்வொரு காலகட்டங்களின் மொழி வளர்ச்சி, சமூகத்தின் மீதான படைப்பாளர்களின் சிந்தனைகளை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும். பல துறைகள் குறித்த நூல்களும், அறிஞர்களின் அறிவுக் களஞ்சியங்களும், தொழில் முன்னேற்ற வழிகாட்டி நூல்கள் என அனைத்தையும் ஓரிடத்தில் வாங்கிச் செல்ல வாய்ப்பாக இருக்குமிடம் புத்தகக் கண்காட்சிகள்தான். தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிகளில் செம்மொழி இலக்கிய நூல்கள் இடம்பெறுவது மிகக் குறைவே. இதற்கு நூல்களின் கூடுதல் விலையும் ஒரு காரணம். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 33-வது புத்தகக் கண்காட்சியில்கூட தமிழக அரசு முயற்சி எடுத்தும், செம்மொழி இலக்கிய நூல்கள் குறைவாகவே இடம் பெற்றன. நூல்களின் விலை கூடுதலாகும்போது அவற்றை சாதாரண பள்ளி, கல்லூரி மாணவர்களால் வாங்கிப் படிக்க முடிவதில்லை எனக் கூறுவதில் உண்மை இருக்கிறது. செம்மொழியான தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கோவையில் வரும் ஜூன் 23-27-ம் தேதிவரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டையொட்டி நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மூலம் கோவை நகரம் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. குடியிருப்பு வளாகங்கள், மாநாட்டு அரங்கங்கள், சாலைச் சீரமைப்புப் பணிகள், ரயில், விமான நிலையங்கள் சீரமைப்பு எனக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மகிழ்ச்சிகரமாக இந்தப் பணிகளை வரவேற்போம். ஓர் உலகப் புகழ் பெற்ற மொழி பற்றிய மாநாடு என்கிறபோது, அந்த மொழியில் உருவான அடிப்படை நூல்களை அனைவரும் வாங்கிப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. இந்த நிலையில், மாநாட்டில் மலிவு விலையில் சங்க இலக்கிய பதினென் மேல்கணக்கு நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென் கீழ்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, நாலாயிரத் திவ்ய பிரபந்தம், திரிகடுகம், ஆசாரம், திருக்கோவை உள்ளிட்ட நூல்களின் மொத்தத் தொகுப்பு மலிவு விலையில் கிடைக்குமாறு விற்பனை செய்தால் மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஆயிரக்கணக்கானோர் பயன்பெற வாய்ப்பாக இருக்கும். தமிழ் படித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் இதையும் ஒரு பணியாகக் கருதி, ஒரு தொகையை ஒதுக்கி மலிவு விலை புத்தகக் கண்காட்சியை தமிழக அரசு நடத்த வேண்டும். இதன்மூலம் லட்சக்கணக்கானவர்களின் வீடுகளில் செம்மொழி இலக்கியங்களின் மணம் வீசும். இந்த நிலையை உருவாக்கினால்தான் செம்மொழி மாநாட்டின் முழுப் பயனும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும். அதுமட்டுமல்ல, சமையல் குறிப்பு, சோதிடம், சுயமுன்னேற்ற நூல்கள், வாஸ்து போன்றவைகள் விற்கப்படுவது கட்டுப்படுத்தப்படவும் வேண்டும். இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டும் வகையில், முதல்வர் அண்மையில் எழுதிய செம்மொழி மாநாட்டுக் கவிதை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவரவும் ஏற்பாடாகியுள்ளது. அதில் வரும் இலக்கியச் செய்திகள் யாவும்கூட நூல் வடிவம் பெற்று அனைவரின் கைகளிலும் தவழ வேண்டும்.
கருத்துக்கள்

நல்ல கட்டுரை. வரவேற்கத்தக்க கருத்து. உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் ப்ல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை,பிற அமைப்புகளுக்கு நிதியுதவி நல்கி மலிவு விலையில் தரமான முறையில் தரமான நூல்கள் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/1/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

செம்மொழி மாநாடு இன்னும் 116 நாள்கள்: கண்காட்சியில் அரிய 1,000 பொருள்கள்



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் தமிழர் வரலாறு தொடர்பான ஓவியங்கள், கல்வெட்டுக்கள் என 1,000 அரிய பொருள்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், விருந்தினர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஒருங்கே குழும உள்ளனர்.இவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு }நாகரிகம், தமிழ் இலக்கியம், தொல்லியல் என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக 30}க்கும் மேற்பட்ட அரங்குகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இக்கண்காட்சியில் தமிழர்கள் நாகரிகத்தின் ஆதாரமாக விளங்கும் தொல்லியல் சான்றுகளான கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள், சிற்பங்கள், ஓலைச்சுவடிகள், பழங்கால நாணயங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கற்காலம் முதல் அண்மைக்காலம் வரையிலானவை இதில் அடங்கும்.சிந்து சமவெளி நாகரிகம்...: மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவில் துணைத் தலைவராக உள்ள தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தமிழர் நாகரிகத்தின் தொடர்பு குறித்து தனி அரங்கு வைக்க உள்ளார். இதுபோல பல தலைப்புகளில் அரங்குகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.தமிழறிஞர்கள் படம்...: கண்காட்சியில், தமிழுக்காக உழைத்த அறிஞர்கள் பரிதிமாற்கலைஞர், ரா.சேதுப்பிள்ளை, உடுமலை நாராயணகவி, மு.வரதராசன், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஏராளமானவர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.மேலும் தமிழ் மொழி குறித்த ஆதாரமாக விளங்கும் அரிய பல புத்தகங்களும் இடம்பெறுகின்றன.இக்கண்காட்சி பற்றி தொல்லியல்துறை ஆணையரும், கண்காட்சி ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ்.ஸ்ரீதர் கூறியது:தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என 6 தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதுதொடர்பான ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் என 1,000 பொருள்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் உண்மையானவையும், மாதிரிகளும் அடங்கும். கண்காட்சியில் வைக்கப்படுவதற்கான பொருள் சேகரிப்பு தற்போது நடந்து வருகிறது என்றார்.
கருத்துக்கள்

இக்கண்காட்சியை நிலையானதாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ச்சியான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கும். மாநாட்டிற்கு வர இயலாதவர்களும் வர விரும்பாதவர்களும் பின்னர் பார்வையிட வாய்ப்பாக இருக்கும். மேலும் இக்கண்காட்சியில் தமிழினம் உலகெங்கும் சந்திக்கும் அவலங்கள் தொடர்பிலான படங்கள், உலகின் மூத்த முதல இனமானத் தமிழ் இனம் சந்திக்கும் படுகொலைகள் தொடர்பான செய்திகள், தமிழர்களின் தாயகம் தமிழ் ஈழம் என்பதற்கான ஆவணங்கள் முதலானவற்றையும் வைக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 3:51:00 AM

What is the purpose of this conference. Karunanithy has ruled Tamil Nadu long time and during this time the tamil has been gradually englishized. It so unbearable to listen any Tamil Nadu Tamils speakising Englishized Tamil. Karunanithy is master actor and without address the real problem is staging an international drama. UNESCO has declared that Tamil is a dying language. Real Tamils should do something rather than attending this sherade. Pure Tamils is spoken in Eelam and instead of supporting the Karunanirth aided and abetted the killing of this. Made deals with devils who burnt more 100000s valuable and unreplaceable books and manuscipts in Tamil. He is only accelerating the death tamil language

By Ram Chetty
2/28/2010 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

'உலக மொழிகள் வரலாற்றுக்கு ​முதன்மையாகத் திகழ்வது தமிழ்': துணைவேந்தர் ராசேந்திரன்



ம.​ ராசேந்திரன்
தஞ்சாவூர், ​​ பிப்.​ 22: உலக மொழிகள் வரலாற்றுக்கு முதன்மையாகத் திகழ்வது தமிழ் மொழி என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.​ ராசேந்திரன்.தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை,​​ சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய தேசியக் கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:எழுத்துகள் இல்லாத பல மொழிகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன.​ ஆனால்,​​ மொழியுடன் எழுத்து வரலாறும் தமிழுக்கு உள்ளது.​ ஒவ்வொரு மொழிக்கும்,​​ இலக்கியத்துக்கும் வாழ்வியல் முறையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும்.​ என்றார் ​ ராசேந்திரன்.தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் செ.​ ராசு பேசியது:கோயில்களில் ஆய்வு செய்த கல்வெட்டு செய்திகளையும்,​​ ஆய்வு செய்யப்படாத கல்வெட்டுகளை ஆய்வு செய்து அந்தச் செய்திகளையும் வெளிக்கொண்டு வரும் பணியில் தமிழக அறநிலையத் துறை ஈடுபட வேண்டும்.பழைமைகளைப் பாதுகாக்கும் வகையிலும்,​​ வருங்கால சந்ததியினர் தொன்மை நாகரிகத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் உள்ள வரலாற்று கல்வெட்டுக்களை ஒவ்வொரு வட்டம் மற்றும் பள்ளி,​​ கல்லூரி,​​ பல்கலைக்கழகங்களில் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றார் ராசு.தமிழக அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.​ காசிநாதன் பேசியது:தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீர் அகழாய்வு செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.​ சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகார் கடல் பகுதியில் நீர் அகழாய்வு மேற்கொண்ட போது கடலில் 5 கிலோ மீட்டர் நீளத்துக்குப் பின் 5 கட்டட அமைப்புகளும்,​​ 18-ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்களின் வலையில் பல அறிய பொருள்கள் சிக்குகின்றன.​ குறிப்பாக,​​ கன்னியாகுமரியில் அதிகமாக இத்தகைய அறிய வகைப் பொருள்கள் கிடைக்கின்றன.​ எனவே,​​ இப் பகுதியில் உறுதியாக நீர் அகழாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும்.​ மேலும் நாகப்பட்டினம்,​​ பூம்புகார்,​​ தொண்டி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் அகழாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும்.பிராமி எழுத்துகள் தமிழ் எழுத்துகளே.​ ஆகையால்,​​ இந்த எழுத்தை இனி தமிழ் பிராமி என உச்சரிக்கும் வழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.​ பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் அறிய பொருள்களை ஆய்வு செய்ய தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரசாயன ஆய்வுக் கூடம் அமைக்க வேண்டும் என்றார் நடன.​ காசிநாதன்.தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினரும்,​​ எண்பேராய உறுப்பினருமான து.​ ரவிக்குமார் பேசியது:​ ​ வரலாற்றை எழுத நம்பகத்தன்மையாக இருப்பதும்,​​ காலத்தைக் குறிக்கவும் கல்வெட்டுகள் உதவுகின்றன.​ இருப்பினும்,​​ காலத்தைக் குறிப்பிடுவதில் சில வேறுபாடுகள் காணப்படுவதால்,​​ இதுகுறித்த ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.புதிய கருத்துகளைக் கண்டறிவதற்கான வழிவகைகள் தற்போதை கல்வித் திட்டத்தில் இல்லை.​ அதனால்,​​ புதியவற்றைக் கண்டறிவதில் கல்விப்புலம் பின்தங்கி உள்ளது.உலகளவில் தமிழகத்தில்தான் அதிக கல்வெட்டுகள் கிடைக்கின்றன.​ தஞ்சை பெரிய கோயிலில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய பகுதிகள் உள்ளன.​ அவற்றை ஆய்வு செய்து பல புதிய வரலாற்றுக் கருத்துகளை வெளிக் கொண்டு வர வேண்டும்.கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 55 பொருண்மைகளில் ஆய்வரங்கம் நடைபெறவுள்ளன.​ 6,500 க்கும் மேற்பட்ட ஆய்வுச் சுருக்கங்கள் வந்துள்ளன.​ அவற்றை ஆய்வு செய்யப் போதுமான வல்லுநர்கள் இல்லை என்றார் ரவிக்குமா

வியாழன், 18 பிப்ரவரி, 2010

செம்மொழி மாநாடு இன்னும் 127 நாள்கள்: முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் குழுக்களின் சிறப்புக் கூட்டம்



கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான சிறப்புக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.செம்மொழி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடு தொடர்பாகவும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.இதில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், அலுவல் சார் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று, தங்களது குழுக்களின் பணி முன்னேற்றம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்க உள்ளனர்.இந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட பணிகளுக்கான உத்தரவுகளையும் முதல்வர் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாநாட்டின் முக்கிய நிகழ்வான ஆய்வரங்கத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான, ஆய்வுச் சுருக்கங்களை நுண்ணாய்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. எவ்வளவு ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி முதல்வர் தகவல் தெரிவிப்பார் என தெரிகிறது.இணையதளத்தில் உடனுக்குடன் தகவல் அளிக்கப்படுமா? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கென www.ulakathamizhchemmozhi.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. ஆனால், அதில் குழுக்களின் அன்றாட கலந்தாய்வுக் கூட்டங்கள் போன்ற விவரங்கள் இடம்பெறவில்லை. "செம்மொழி மாநாட்டுக்கான இணையதளத்தில் அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்' என்று தமிழ் அறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் போட்டி...: உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி பள்ளி மாணவர்களுக்கு "கணினி தமிழ் வரைகலைப் போட்டிகள்' நடத்தப்பட்டன. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதுபோல கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது."உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான கூட்டம், அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பிப்ரவரி 18}ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலை அறிவியல், பொறியியல், வேளாண், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கணினித் தமிழ் வரைகலைப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் போட்டி நடைபெறும் தேதி, அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்' என்றார் அக்குழுவின் உறுப்பினரும், கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஆன்டோ பீட்டர்.
கருத்துக்கள்

தமிழ் ஈழ விடுதலைப் போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தந்தோர் வரலாற்றில் நிலைப்பர். மாறாக நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்த்து அழிவுப் பணிஆற்றியோர் வரலாற்றில் இருந்து துடைத்து எறியப்படுவர். இது காலங் காட்டும் உண்மை. எனவே, இந்தச் செய்தியைப் பொறுத்தவரை எப்படியும் நடக்க இருக்கும் மாநாடு தமிழ், தமிழர் நலன் சார்ந்ததாக இருப்பதற்கான அறிவுரைகளை (உரியவர்கள் செவி மடுக்கின்றாரகளோ இல்லையா ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போம என்ற முறையில்) கூறுவதே பொருத்தமாகும். எனவே, மாநாடு தொடங்கும் பொழுது தமிழ் நாட்டில் எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் தமிழ் இருக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, படிப்படியாக இல்லாமல் வரும் கல்வியாண்டு முதல் எல்லா நிலைகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.ஆலயமொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளம்பர மொழியாகவும் உயர்கல்வி மொழியாகவும் தமிழே திகழ்தல் வேண்டும். தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் இருத்தல் வேண்டும். எண்ணியாங்கு ஆற்றும் வினைத்திறன் மிக்க கலைஞர் ஆவன செய்வாராக!

அன்புடன் மன்றாடும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/18/2010 4:32:00 AM

ஈழத் தமிழ் மக்கள் இழந்து போன விடுதலையை மீண்டும் பெறு வதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப் பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்து கொண்டன. உலகின் மிகப்பெரிய மாந்தப் பேரவலம் என்றுதான் இதனைக் கூற வேண்டும். 80,000-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர் கொல்லப்பட்டு, இன்றும் 30,000 தமிழர்கள் முள்வேலிச் சிறைக்குள் முடக்கப்பட்டுச் சொல்லொணா அவலத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். உலகிலேயே இது வரை எங்கும் எப்பொழுதும் நடந் திராத கொடுமைகளும் இழிவுகளும் அவர்கட்கு இழைக்கப்படுகின்றன. இட்லர் காலத்தில் யூதர்களும் கூட இவ்வளவு துன்பம் அடைந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர, உடலாலும் உள்ளத்தாலும் இவ்வளவு கொடுமைகட்கும் இழிவுகட்கும் ஆளானதில்லை. மாந்த இனமே கொதித்தெழ வேண்டிய பேரவலம். ஆயினும் மிகக் கொடிய, இரக்கமற்ற, மாந்தநேயமற்ற கல் நெஞ்சங்களும் அரசியல் சூழ்ச்சிகளும், தன்னல வெறிகளும் இனப்பகைமையும் இதன் பின்னிருந்து வேலை செய்வதால் உலகமே வாய்மூடிக்கிடக்கின்றது

By Vani
2/17/2010 9:18:00 PM

தமிழக முதல்வரின் அருள் உள்ளம் எப்படிப்பட்ட தென்பதை ஈழ மக்கள் விடுதலைப் போரில் அவர் ஆற்றிய அரும்பணி காட்டிக் கொடுத்துவிட்டதே. அந்த ''அருள் உள்ளம்'' தான் செம்மொழி மாநாட்டை யும் அறிவித்துள்ளது. இதிலிருந்தே மாநாடு எப்படி எப்படி நடக்கும். என்ன என்ன பேசப்படும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பூச்சும் புனைவுகளும் வெளிப்பகட்டும் விளம்பரமும் அங்குக் களிநடம் புரியும் என்பதை மறுக்க முடியுமா? தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சிமொழியாகவும் இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும் ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக் காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டல் கட்கு உட்பட்டு உழல்கின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரைப் பல்லாண்டுக் காலமாய்ப் பிணித்துள்ள ஒரு பெருநோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம் மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை!

By Vani
2/17/2010 9:17:00 PM

சிங்களனின் கையாளாகவே செயல்பட்டார். வரலாற்றிலிருந்து இந்த உண்மையை மறைக்க முடியாது. இந்த நிலையில் தான் செம் மொழி மாநாடு அவரால் அறிவிக்கப் பட்டுள்ளது. ஈழ மக்கள் விடுத லையை அழித்ததில் தம் பெயர் கெட்டுப்போன நிலையில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் தான் இது அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முதலில் இவர் நடத்தவிரும்பியது முன்பு மூன்று முறை தமிழகத்தில் நடந்தது போன்ற மற்றோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி (ஆரவார) மாநாட்டைத் தான். ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் அதற்கு ஒத்துழைப்பு நல்காமையால், அதை நடத்திப் படம் காட்ட முடியாத நிலையில், தம் அதிகாரத்துக்குட்பட்ட செம்மொழி மாநாட்டை இப்பொழுது அறிவித்துள்ளார். ''உள்ளத்தின் அருள் உணர்வால், மக்கள் நேயத்தால் மேற்கொள்ளப்படும் செயல்களே உண்மைச் செயல்கள். பிறவெல்லாம் போலி'' என்கின்றார் திருவள்ளுவர். எண்ணத்தில் தெளிவில்லாதவன் எப்படி மெய்ப் பொருளைக் காண முடியாதோ அப்படியே உள்ளத்தில் அருள் உணர்வு இல்லாதவன் அறம் செய்ய முடியாது என்கின்றார்.

By Vani
2/17/2010 9:13:00 PM

ஈழத்தமிழர் விடுதலைப் போரில் தோல்வி அடைந்ததற்குக் காரணமே இந்திய அரசு தன் தமிழின வெறுப்பாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும், சிங்களன் தொடங்கிய போரைத் தானே முன்னின்று நடத்தியது தான். இவ்வாறு இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன் வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் தமிழக முதல்வர், இந்திய அரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால் வந்ததுதான். தமிழக முதல்வர் நினைத்திருந்தால் இந்திய அரசு ஈழப்போரில் சிங்களனுக்கு உதவாமல் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தமிழக முதல்வர் நடுவணரசில் தாம் பெறும் சொந்த நலன்கட்காக ஈழத் தமிழினத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று உலகமே பேசுகின்றது. தமிழக முதல்வரின் இனவுணர்வற்ற, இரக்கமற்ற காட்டிக்கொடுப்பும் இரண்டகத் தன்மையும் இன்று பலராலும் பழித்துரைக்கப்படுகின்றன. போருக்குப் பின்பும் முள்வேலிக்குள் முடக்கப் பட்டுக்கிடக்கும் முப்பதாயிரம் தமிழரைக் காப்பாற்றுவதில் கூடத் தமிழக முதல்வர் அக்கறை காட்டவில்லை. இந்திய அரசோடு சேர்ந்துகொண்டு போலிக் குழுக்களை இலங்கைக்கு விடுத்துச் சிங்கள அரசின் கொடுஞ் செயல்களை மூடி மறைப்பதிலும் பூசிமெழுகுவதிலுமே முன்னின்றார். சிங்களனின் கையாளாகவே செய

By Vani
2/17/2010 9:12:00 PM

ORU SILA THAMILARIN ULLATHTHIL VAALUM KARUNANITHIYIN AAYUL KAALAM INNUM 127 NAALIL MUDIVUKKU VARUKIRATHU.

By kumuthiny
2/17/2010 12:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தனி அமர்வு: முதல்வருடன் ​மயில்சாமி ஆலோசனை



முதல்வருடன் மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
சென்னை, ​​ பிப்.11: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்துகள் பரிமாறப்படும் வகையில் தனி அமர்வுக்கு ஏற்பாடு செய்வது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை நடத்தினார்.முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.​ இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியது:""நாசா போன்ற மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழில் படித்த விஞ்ஞானிகள் பலர் உள்ளனர்.​ அவர்கள் ​ தங்களது ஆராய்ச்சி உள்ளிட்ட விஷயங்களை செம்மொழி மாநாட்டில் தமிழிலேயே பரிமாறிக் கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன்.இதற்கென 50 விஞ்ஞானிகள் வரை அமர்ந்து விவாதிக்க தனி அமர்வுக்கு ஏற்பாடு செய்வது குறித்தும் அவருடன் விவாதிக்கப்பட்டது."சந்திரயான் 2' விண்கலம் 2012 இறுதியில் அல்லது 2013}ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும்.​ சந்திரனில் கனிமங்கள் இருக்கின்றனவா?​ என்பதை அறிய "சந்திரயான் 2' பயன்படுத்தப்படும்.​ இதன் அடுத்த கட்டமாக,​​ சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது குறித்து ஆய்வு நடத்தப்படும்'' என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழ் வழி பயின்ற அறிவியல் அறிஞர்களைப் பங்கேற்கச் செய்வது பாராட்டிற்குரியது. ஆனால், தமிழ் வழியாகப் பயின்றவர்களையும் பயில எண்ணுபவர்களையும் ஊக்கப்படுத்த இது போதா. தமிழ் வழி பயின்றவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அரசு நடைமுறைப்படுத்தினால் இப் பழைய வரலாறு எதுவும் தேவையில்லை. மொழிப் பாடமாகத் தமிழைப் படிப்பிக்கச் செய்வதைக் கூடத் தவணை முறையில் நிறைவேற்றும் அரசி்ற்கு முதலில் அவர் அறிவூட்ட வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழால் பயன்பெறுவோர் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்ப் பகை ஆட்சி வந்தா இதனை நடைமுறைப்படுத்த முடியும்? கட்டாயத் தமிழ் மொழிக் கல்வியையும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கல்வி முறையையும் உடனே நிறைவேற்ற வேண்டும். அல்லது தமிழ் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டுக் கல்வி குறிர்த்துப் பேச வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar
General India news in detail

புதன், 3 பிப்ரவரி, 2010

செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்கு விருது



சென்னை,​​ பிப்.2: உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு விருது வழங்கப்படுகிறது.முதல்வரை செவ்வாய்க்கிழமை சந்தித்த நியூயார்க் தமிழ்ச் சங்க செயலாளர் பிரகாஷ்சாமி இந்தத் தகவலை தெரிவித்தார்.​ உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 100 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும்,​​ அதில் "அமெரிக்க காங்கிரஸ் மகா சபை விருது' முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.​ இந்தியர் ஒருவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கே தெரியும். விருதுகள் அவருடைய தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சித் தலைமை என்ற அளவு கோல் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்று. விருதுகள் வழங்கும் பல்கலைக்கழகம் போன்ற அவர் ஏன் இந்தச் சிறிய விருதுகளுக்கெல்லாம் மன மகிழ்வு கொண்டு ஏற்றுக் கொள்கிறார் என்று தெரியவில்லை. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு எனத் தெய்வப் புலவர் கூறியதை நினைத்து போலிக் கூட்டம் தரும் பட்டங்களால் மகிழாமல் தமிழினத்தை ஒன்று படுத்தித் தமிழர் தாயகம் உலகோரால் ஏற்கப்பட ஆவன செய்ய வேண்டுகிறேன். வரலாற்றில் படிந்த கறைகளைத் துடைக்கும் மருந்து அஃது ஒன்றுதானே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/3/2010 2:56:00 AM

அமெரிக்க கங்கிரஸ் மகாசபை விருது இதுவரைக்கும் யாருக்குமே கொடுக்கவில்லையா!,இன்னாகடா மகாசபை,நியூயார்க் ன்னா ஏமாந்துடுவோமா!.லெட்டர்பேட் இயக்கமுன்னு எங்களுக்கு தெரியாதா!.நான் பொறந்து கண்முழிச்சதிலேந்து அந்த பேமானி விருதுதான் வாங்கினு இருக்றான்.வேற யாராவது வாங்க உடுங்கப்பா!,உலகம் சுத்துது,காலம் நகருது.நான் ஒரு விருது தரேன்.முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாடி,பெரியார் திடலில்,திராவிடகழக வீரமணி கொடுத்தது,"மகளிர் நலன் காக்கும் மாண்பாளர்"!.

By விருதுநகர் பெ சீனிவாசன்
2/3/2010 2:35:00 AM

""முதல்வருக்கு பதிலா துணை முதல்வர் போறதுக்கான காரணம் தெரியுமா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி. ""டில்லிக்கு போறது தான பா... என்ன காரணம்...'' எனக் கேட்டார் அன்வர்பாய். ""டில்லியில் இந்த வார கடைசியில, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தறது குறித்த கூட்டமும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டமும் பிரதமர் தலைமையில நடக்கப் போவுது... இந்த கூட்டத்துல, எல்லா மாநிலங்களின் முதல்வர்களும் கலந்துக்குவாங்க... ""போன முறை நடந்த கூட்டத்திலும், முதல்வர் கலந்துக்கலை... இந்த முறை, விலைவாசி உயர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் கலந்துக்கறதா இருந்துச்சு... இப்ப, திட்டத்தை மாத்திட்டு, துணை முதல்வர் தான், இந்த கூட்டங்கள்ல கலந்துக்கப் போறாரு வே... "அதே தேதியில, முதல்வருக்கு சென்னையில் சினிமாக்காரங்க பாராட்டு விழா நடத்துதாங்க... அதுல, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கலந்துட்டு முதல்வரை பாராட்டப் போறாங்க... முதல்வர் போகாததுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்ன்னு சொல்லுதாங்க வே...'' என சொல்லி முடித்தார் அண்ணாச்சி; பெரியவர்கள் புறப்பட்டனர் தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்

By p.sakthi
2/3/2010 2:31:00 AM

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் திரைத்துறை கண்மணிகளின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவிற்கு செல்வேனே தவிர டெல்லி செல்ல மாட்டேன்

By P.SAKTHI
2/3/2010 2:25:00 AM

This is very very important news!!!!!!!

By C.Saran
2/3/2010 2:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 30 ஜனவரி, 2010

செம்மொழி மாநாடு: கருணாநிதி கவிதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை



சென்னை, ஜன.29: செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார்.அந்தப் பாடல் வருமாறு:பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!உண்பது நாழி உடுப்பது இரண்டேஉறைவிடம் என்பது ஒன்றேயெனஉரைத்து வாழ்ந்தோம்உழைத்து வாழ்வோம்.தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்நன் மொழியே நம் பொன் மொழியாம்!போரைப் புறம் தள்ளிபொருளைப் பொதுவாக்கவேஅமைதி வழிகாட்டும்அன்பு மொழிஅய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலேஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடுஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!அகமென்றும் புறமென்றும் வாழ்வைஅழகாக வகுத்தளித்துஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -ஓதி வளரும் உயிரான உலக மொழி -நம் மொழி}நம் மொழி - அதுவேசெம்மொழி}செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!என பாடல் எழுதியுள்ளார்.முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாம்பே ஜெயஸ்ரீ உடன் இருந்தனர்.
கருத்துக்கள்

நல்ல எளிய பாடல். ஒவ்வொரு விழாவின் (தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன்)இறுதியில் இப்பாடலைப் பாடலாம். பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/30/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 29 ஜனவரி, 2010

உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​துக்கு தனி அரங்கு: இராம.கோபா​லன்​ வலி​யு​றுத்​தல்



தாரா ​பு​ரம்,​​ ஜன.​ 27: கோவை​யில் நடை​பெற உள்ள உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​திற்​கென தனி அரங்கு அமைக்க வேண்​டும் என்று இந்து ​முன்​னணி மாநில அமைப்​பா​ளர் இராம.கோபா​லன் வலி​யு​றுத்​தி​னார்.​​ ​ ​ தாரா​பு​ரத்​தில் இந்து முன்​னணி மாநாடு செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ மாநி​லப் பொதுச்​செ​ய​லர் காடேஸ்​வரா சுப்​பி​ர​ம​ணி​யம் தலைமை வகித்​தார்.​ இதில் மாநில அமைப்​பா​ளர் இராம.கோபா​லன் பேசி​யது:​​ ​ ​ கரூ​ரில் வரும் ஜூன் 20-ம் தேதி மாநில மாநாடு நடை​பெற உள்​ளது.​ இதில் பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்​தித் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட உள்​ளன.​ ​கோவை​யில் நடை​பெ​றும் உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் சித்​தர் பாடல்​கள்,​​ தேவா​ரம்,​​ திரு​வா​ச​கம் பாடு​வ​தற்​கா​க​வும்,​​ அவை குறித்து விவா​திப்​ப​தற்​கா​க​வும் தனி அரங்கு அமைக்​கப்​பட வேண்​டும்.​ ​சமச்​சீர் கல்வி முறை​யால் பக்தி மார்க்​கம் ஒடுக்​கப்​ப​டும் அபா​யம் உள்​ளது.​ ​என​வே​தான் ​ சமச்​சீர் கல்வி முறையை நடை​மு​றைப்​ப​டுத்​து​வதை இந்து முன்​னணி எதிர்க்​கி​றது.​ ​பசுவை தேசிய விலங்​காக அறி​வித்து,​​ அவற்​றைப் பாது​காப்​ப​தற்​கான ​நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.​ பசு​வின் சாணம் மூலம் இயற்கை உரம் தயா​ரிக்​கத் துவங்​கி​விட்​டால்,​​ யூரியா இறக்​கு​ம​தி​யைத் தவிர்க்​க​லாம்.​ ​ஹஜ் பய​ணி​க​ளுக்கு மானி​யம் வழங்​கு​வ​து​போல்,​​ காசி,​​ ராமேஸ்​வ​ரம் செல்​லும் பக்​தர்​க​ளுக்​கும் மத்​திய,​​ மாநில அர​சு​கள் மானி​யத் தொகை​களை வழங்க வேண்​டும் என்​றார் இராம.கோபா​லன்.​​ ​ ​ ​ மாநி​லத் தலை​வர் அர​சு​ராஜா,​​ துணைத் தலை​வர் கு.பூசப்​பன்,​​ பொறுப்​பா​ளர்​கள் முரு​கா​னந்​தம்,​​ மூகாம்​பிகை மணி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.
கருத்துக்கள்

மாநாட்டுப் பொருண்மை வரிசை எண் 19 சமயமும் தமிழும் என உள்ளது. ஆதிக்க ஆரியம் எனத் தனியாக ஓர்அமர்வு வேண்டும் என விரும்புகிறாரா இராம.கோபாலன்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 3:16:00 AM

Why don't you visit to Manik Farm in Vanni where the people who speak Tamil and see how they suffer? Listen to their stories and find out how Tamils were killed, tortured, murdered and raped by Nazi Sinhalese, then carry on with your Tamil conference and research.

By Vani
1/28/2010 10:05:00 PM

One special counter for may 16th 2009 vanni killing can also be put.

By Ragu
1/28/2010 7:35:00 PM

Well done Ramagopalan. Whatever you have said is fine. Will MUKA pay heed?

By Rahul
1/28/2010 3:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *