காரைக்குடி:அலோபதி டாக்டர்களே, சித்த மருத்துவத்தை பரிந்துரைப்பதால்,
சித்த மருத்துவப்பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது.சித்த மருத்துவ டாக்டர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று
மாதங்களுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 60 க்கும் குறைவான நோயாளிகளே வந்தனர்.
டெங்குவுக்கு சித்த மருத்துவத்தில், உள்ள நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக
உள்ளதால், அதை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 120
ஆக உயர்ந்துள்ளது. டெங்கு மட்டுமல்லாமல், அனைத்து நோய்க்கும் சிகிச்சை
பெற்று செல்கின்றனர். சித்த மருத்துவ துறையும், நிலவேம்பை, சிறப்பு
ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர். எந்த மருந்துக்கும் இந்த
ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக