வந்தாரை வாழ வைக்கலாமா : இன்று பன்னாட்டு இடம்பெயர்வோர் நாள்
உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட
வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும்
முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும்
என்பதே இதன் நோக்கம். உலகளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தோராக உள்ளனர்.
இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது
இடத்தில் உள்ளனர்.
யார்:
இடம்பெயர்வோர்
என்பவர், "சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ,
அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ
இடம் பெயர்ந்தோரை குறிக்கிறது'. இந்த முறையான இடம்பெயர்தலை விடுத்து, ஒரு
நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்பை மீறி சட்ட விரோதமாகவும் குடியேறுகின்றனர்.
உதாரணமாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்து சட்ட விரோதமாக
ரேஷன் கார்டுகளை பெற்றவர்களும் இருக்கின்றனர். இதைத் தவிர உள்நாட்டிலேயே
இடம்பெயர்வோரும் உள்ளனர்.
சம உரிமை:
இடம்
பெயர்ந்தோருக்கு ஒவ்வொரு அரசும் பாதுகாப்பு, சலுகைகள் வழங்க வேண்டும்.
இடம்பெயர்வோரை தவிர்க்கும் போது, அந்நாட்டிற்கு தான் இழப்பு. இவர்களை
அங்கீகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரம் உயரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக