திங்கள், 17 டிசம்பர், 2012

இராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்

இராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் - லைபேசி உட்பட அனைத்தும் பறிப்பு
ராமேஸ்வரம்:கச்சத்தீவை தாண்டி, மீன்பிடித்த ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி, திசைகாட்டும் கருவி, "மொபைல்' போன்கள் மற்றும் இறால்களை பறித்து சென்றனர். மேலும், வலைகளை வெட்டி கடலுக்குள் மூழ்கடித்தனர்.நேற்று முன்தினம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, 652 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவை தாண்டி மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு, அன்ட்ரன், டுவிட்டர், சகாயம் ஆகியோரை கயிறு, கம்பால் தாக்கி, படகில் இருந்த, வலைகளை வெட்டி சேதப்படுத்தி, கடலில் மூழ்கடித்தனர். மேலும், அன்ட்ரன், சகாயம் படகிலிருந்த திசைகாட்டும் கருவி (ஜி.பி.எஸ்.,), "மொபைல்' போன்களை பறிமுதல் செய்து, துப்பாக்கியை காட்டி எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
மீனவர்கள் மாரிநம்பு, ஆரோக்கியம் கூறியதாவது: எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே, மீன்பிடித்த எங்களது படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

செய்வதறியாது திகைத்து நின்றபோது, படகிற்குள் ஏறி திசைகாட்டும் கருவி, "மொபைல்' போன்களை பறிமுதல் செய்தனர். இதனால், ஒரு படகிற்கு, 40 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டது, என்றனர்.மண்டபத்தில் பாதிப்பு : இதேபோல் மண்டபம் வடக்கு பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற, மீனவர்கள் ஏராளமானோர் நேற்று கரைதிரும்பினர். கச்சத்தீவை தாண்டிய, இவர்களையும் இலங்கை கடற்படையினர் விட்டுவைக்கவில்லை. மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, படகிற்குள் ஏறி, இறால்களை பறித்துள்ளனர். தடுக்க முயன்ற மீனவர்களை கம்பால் தாக்கியும், வலைகளை, வெட்டி கடலுக்குள் மூழ்கடித்துள்ளனர். இப்பகுதிக்குள் வரக்கூடாது என, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.மீனவர், தர்மபுத்திரன் கூறியதாவது: ""போதிய இறால் வரத்துக்கு உரிய விலை இல்லை'' என, தவித்து வருகிறோம். இந்நிலையில், இலங்கை கடற்படையினர் தாக்குதலால், பிடித்த இறால்களையும் பறிகொடுத்து, "வெறுங்கை'யுடன் திரும்பி வந்தோம்,'' என்றார்.

1 கருத்து:

  1. இது தமிழ்நாட்டின் அன்றாடச் செய்தியாகி விட்டது! ஆனால், இன்று முதல்வரோ "தமிழ் மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன" என்றிருக்கிறார். தமிழ் அமைப்புக்கள் இதைக் கண்டித்துக் கண்டிப்பாக அறிக்கை வெளியிட வேண்டும்!

    பதிலளிநீக்கு