வியாழன், 20 டிசம்பர், 2012

செலவுக்குத் திண்டாடும் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பொறியாளர்

மருத்துவ ச் செலவுக்கு த் திண்டாடும்   அமில வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவி

காரைக்கால்: காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோதினி என்ற இளம் பெண், தற்போது மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டு வருகிறார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, காரைக்காலில் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் அவரது தந்தை, வினோதியின் மருத்துவ செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். டாக்டர்கள் பல மாதங்கள் வினோதினி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறியிருப்பதால், அவர் நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக