புதன், 19 டிசம்பர், 2012

ஆயுள்நல மருத்துவம் தீர்க்கும்

சொல்கிறார்கள்

"ஆயுர்வேதம் தீர்க்கும்!'

வயிற்று வலி, தோல் நோய் என, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஆயுர்வேத ஆடைகளைத் தயாரிக்கும், "ஆயுர்வஸ்தரா'வின் டெக்னிக்கல் டைரக்டர் ராஜன்: என் சொந்த ஊர் பாலராமபுரம். எங்க பரம்பரை, திருவாங்கூர் மகாராஜாவோட அரண்மனையில் ராஜ வைத்தியரா இருந்தவங்க. என்னோட எள்ளு தாத்தா ஐயப்பன், அரண்மனையில், மூலிகை வைத்தியரா இருந்தார். மதுரை மகாராஜாவுக்கும், இவர் தான், ஆயுர் வேத ஆடைகளைத் தயார் பண்ணிக் கொடுத்தார்.

இந்த பின்னணியால், எங்கள் பகுதியிலுள்ள நெசவாளர்களை, ஆயுர்வேத ஆடைத் தயாரிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்தோம். ஆயுர்வேத ஆடைகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால், வரவேற்பு கிடைக்கும் என்பதால், தொழிலை விரிவுபடுத்தினோம்.
பருத்தித் துணியில் நெய்யப்பட்ட ஆடை, ஆயுர்வேத மூலிகைக் கலவையில், வேக வைக்கப்பட்டு, மூலிகைக் கலவை, ஆடையில் நன்கு பிடித்தவுடன், அலசி நிழலில் காய வைக்கிறோம்.

இண்டிகா, மஞ்சுஸ்தாதி, நீல அமரி, கடுக்காய், மஞ்சள் என, விதவிதமான நிறங்களில், விதவிதமான புடவைகள், சுடிதார், ஜிப்பா, வேஷ்டி, பெட்ஷீட் தயாரிக்கிறோம்.
ஆயுர்வேத ஆடை என்றதும், விலை அதிகம் என, நினைக்க வேண்டாம். வாதநோய்க்கு, 250 ரூபாயிலேயே புடவை கிடைக்கும். நோய்களை குணப்படுத்தும் புடவைகள் மட்டுமின்றி, கல்யாண புடவைகளையும் தயாரிக்கிறோம்.ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கு, ஆடைகள் தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். வாத நோய், உயர் அழுத்தம் உட்பட, அனைத்து நோய்களுக்கும், எங்களிடம் ஆடைகள் இருக்கின்றன.

இந்த ஆடைகளை, டிட்டர்ஜென்ட் பவுடரில், ஊற வைக்கக் கூடாது. அதிக வேதிப் பொருட்கள் இல்லாத சோப்புகளில், துவைக்க வேண்டும். ஆயுர்வேத மூலிகைகளோடு, ரசாயனப் பொருள் சேர்ந்தால், மூலிகையின் குணம் மாறி விடும்.
இந்தியாவுக்கு, சுற்றுலா வருகிற வெளிநாட்டினர் விரும்பி வரும் இடம், கேரளா என்பதால், எங்கள் ஆயுர்வேத ஆடைகளுக்கு, பலமான வரவேற்பு உள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஆர்டர்கள், எங்களுக்கு குவிந்தபடி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக