ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அ. மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழன் (ஆ).வெண் புள்ளி'என்பதுநோயல்ல.

சொல்கிறார்கள்

"இ-மெயில் கண்டுபிடித்தது தமிழன் தான்!'
இ-மெயிலை கண்டு பிடித்த சிவா அய்யாதுரை:
என் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். என் பெற்றோர் இருவரும், படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே, எனக்கு படிப்பின் மீது ஆர்வம் உண்டாகியது.மும்பையில் இருந்த நாங்கள், என் மேற்படிப்புக்காக, அமெரிக்காவுக்கு சென்றோம்.விடுமுறையில், இந்தியாவுக்கு வந்த போது சம்மர் கிளாசில், "போர்ட்ரான் 4' என்ற, கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியை கற்றுக் கொண்டேன். அப்போது, அம்மாவின் நண்பர் மைக்கேல்சன், என்னை அழைத்து, கணினி ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினார். ஒரு கணினியிலிருந்து, மற்றொரு கணினிக்கு, செய்தியை, எலக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்ப வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.கடந்த, 1978ம் ஆண்டு தான் முதன் முதலாக, "போர்ட்ரான் 4' மொழியில், 50 வரியில், ஒரு எலெக்ட்ரோ மெயிலை, மைக்கேல்சனுக்கு அனுப்பினேன், இதன் சுருக்கம் தான், இ-மெயில்; அப்போது எனக்கு, 14 வயது.நான் தான் இ-மெயிலை கண்டுபிடித்ததாக, ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம், அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.இன்று பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், கம்போஸ், சப்னெக்ட், டு, டிராப்ட்ஸ் உள்ளிட்ட, 86 வகையான, இ-மெயில் புரோகிராம்களை கண்டுபிடித்தேன்.என் முழு வாழ்க்கையையும், அறிவியலில் தான் செலவிடுவேன். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மாறி மாறி பணிபுரிந்து, இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மையை ஆராய்ச்சி செய்து, அதை கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில், புதிய புரட்சியை உருவாக்குவது தான், என் அடுத்த இலக்கு. புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்.
"வெண் புள்ளி'என்பதுநோயல்ல!'
"வெண் புள்ளிகள்' விழிப்புணர்வு இயக்க, இந்தியத் தலைவர் உமாபதி: "வெண்குஷ்டம்' பயங்கரமான, அருவருப்பான நோய்; தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிடமிருந்து வரும் பரம்பரை நோய்; தொற்றும் தன்மை கொண்ட தொற்று வியாதி. வெண் குஷ்டம் என்றாலே, தீராத நோய்' என்று தப்பு தப்பான கருத்து உள்ளது.ஆனால், இது நோயல்ல. வெண்மையான புள்ளிகள் மட்டுமே. சருமத்திற்கு, நிறத்தை தருவது, "மெலனின்' என்ற வேதிப்பொருள். மெலனின் மெலனோசைட் செல்களை, வெள்ளை அணுக்கள் அழிப்பதால், அவ்விடத்தில், வெண் புள்ளிகள் உருவாகின்றன.வெண் குஷ்டம் என்ற வார்த்தையை நீக்கி, வெண்புள்ளிகள் என்று மாற்றப் போராடி, 2010ல், வெண்புள்ளிகள்னு அரசாணை வெளியிட செய்தோம்.வெண்புள்ளிகளை மூலிகையில் குணமாக்க, "மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம்' மருந்து கண்டுபிடித்துள்ளது.வெண்புள்ளி ஏற்படுவதால், சிலர் மனஅழுத்தம் காரணமாக, தற்கொலைக்கு செல்கின்றனர். வெண்புள்ளி ஏற்பட்டவர்களை பார்க்கும் பலரும், வெறுத்து ஒதுக்குகின்றனர். இவர்கள், பொது மக்களிடம் தனிமைப்பட்டு, கூனிக் குறுகி நிற்கின்றனர்.கல்யாண பொண்ணுக்கு, வெண் புள்ளி இருக்குன்னு சொல்லி, மேடையிலேயே கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் பேசி, கல்யாணத்தை நடத்தி வைச்சோம்.மாணவனுக்கு வெண்புள்ளி இருந்ததால், கல்லூரி விடுதியை விட்டே நீக்கியது, தனியார் பல்கலை. போராடி, மீண்டும் கல்லூரியில் சேர்த்தோம். இந்நிலை மாற, 16 ஆண்டுகளாக போராடுகிறோம்.இந்தியாவில், ஆறு கோடி மக்களும், தமிழகத்தில், 36 லட்சம் மக்களும், வெண் புள்ளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெண் புள்ளி காரணமாக, திருமணமாகாதவர்களுக்கு, இலவச சுயம்வரத்தை, ஜன., 27ம் நாள், தென்னிந்தியாவில், முதன் முறையாக, திருச்சியில் நடத்துறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக