செவ்வாய், 18 டிசம்பர், 2012

ஏழு உரூபாயில் அரசுப் பேருந்துகளில் தூதஞ்சல்

ஏழு உரூபாயில் அரசுப் பே்துகளில் ல்  : வீடுதேடி ்சல் வராது
 
தபால்களை உடனடியாக டெலிவரி செய்ய, அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கடிதத்துக்கு ஏழு ரூபாய் கட்டணத்தில், வெளியூர்களுக்கு அனுப்ப முடியும். அரசு போக்குவரத்து கழக பஸ்களில், கூரியர் மற்றும் பார்சல் சேவை அறிமுகம் செய்யப்படும் என, அரசு அறிவித்திருந்தது. கடந்தாண்டு கூரியர், பார்சல் சேவை, கோவை போக்குவரத்து கழகத்தில், முன்னோட்டமாக கொண்டு வரப்பட்டது.

"ஏழு டிகிரி செல்சியஸ்' : இச்சேவையால், 24 லட்சம் ரூபாய் வருவாயை, போக்குவரத்துக் கழகம் ஈட்டியது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, இதன் மூலம், கூடுதல் வருவாய் கிடைப்பதால், மாநிலம் முழுவதும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுஉள்ளது.
கூரியர், பார்சல் சேவை குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "செவன் டிகிரி செல்சியஸ்' என்று, அனைத்து அரசு பஸ்களிலும், சிவப்பு வண்ண, "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எட்டு போக்குவரத்து கழக பேருந்துகளில், நாளொன்றுக்கு, 2.10 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். கூரியர், பார்சல் சேவையை, கோவை போக்குவரத்து கழகத்தில், பரிசோதனை முறையில் அறிமுகம் செய்தோம். இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது, அனைத்து போக்குவரத்து கழகங்களிலும், இச்சேவை விரிவுப்படுத்தும் பணி நடக்கிறது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, "செவன் டிகிரி செல்சியஸ்' என்று விளம்பரப்படுத்தி வருகிறோம். தபால்களை, ஏழு ரூபாயில் அனுப்பலாம். இதை குறிக்கும் வகையில், "7 டிகிரி செல்சியஸ்' என்று பெயரிட்டுஉள்ளோம். அரசு பஸ்களில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பஸ் சேமிருடத்தில் உள்ள பஸ் நிலையங்களில் பெற்று கொள்ளலாம். தபால் மற்றும் பொருட்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்றடையாது. பொதுமக்களே, பஸ் நிலையத்தில் நேரடியாக பெற்று கொள்ள வேண்டும். கட்டண விபரம், கி.மீட்டருக்கு ஏற்றாற்போல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அவசியம் : "கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம், வரவேற்கத்தக்கது. அரசு பஸ்கள் மூலம் அனுப்பப்படும் தபால் மற்றும் பொருட்களால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்காத வகையில், இருக்க வேண்டும். மேலும், அனுப்பப்படும் தபால் மற்றும் பார்சல்களுக்கும், பாதுகாப்பு இருக்க வேண்டும்; இவற்றுக்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

-தினமலர் செய்தியாளர்-
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக