வியாழன், 20 டிசம்பர், 2012

மரக்கன்றுகளை நடுங்கள்;தற்கொலையை வெல்வோம் : மாற்று த் திறனாளி பரப்புரை

மரக்கன்றுகளை நடுங்கள்;தற்கொலையை வெல்வோம் : மூன்று சக்கர  மிதிவண்டியில் மாற்று த் திறனாளி பரப்புரை

சிவகாசி: மழை வேண்டி "மரக்கன்றுகள் நடுங்கள், தற்கொலையை வெல்வோம்' என்ற கோஷத்துடன், மூன்று சக்கர சைக்கிளில்மாற்றுத்திறனாளி பிரசாரம் செய்கிறார்.
இயற்கையின் மாறுபாடன காலச்சூழ்நிலையால் மழை பொய்த்து, வறட்சி, விவசாயம் பாதிப்பு என, ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்ட சூழ்நிலை உருவாகிறது. பிறப்பு என்பது, கடவுள் நமக்கு தாயின் மூலம் கொடுத்த அழகான வாழ்வு. அந்த வாழ்வு, பல போராட்டங்களை கொண்டது என உணர்ந்து, தற்கொலையை வெல்வோம் என்ற பிரசாரத்துடன், மாற்றுத்திறனாளி ஒருவர், மூன்று சக்கரவண்டியில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.திருநெல்வேலி மாவட்டடம் இட்டாமொழியை சேர்ந்தவர் நெல்சன், 29. அஞ்சல் வழி மூலம், பி.காம்., முடித்துள்ளார். பிறவியிலே நடக்க முடியாத இவர், சமூக சிந்தனையோடு, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறார். சிவகாசியில் இருந்து சென்னை வரை, பிரசாரத்தை துவக்கிய இவர், ""மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் முன், மரக்கன்றுகளை நடுவீர், மழை பெறுவீர் '' என, பிரசாரம் செய்கிறார். தினமும் 15 முதல் 20 கி.மீ.,தூரம் பயணிக்கிறார். இவர் கூறுகையில், "" 2005ல் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, 2010ல் துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளேன். படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல. படிப்பு என்பது நமதுதிறமை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு என கருத வேண்டும். ஏதோ ஒரு காலண்டர் சொல்லும் கட்டு கதையை நம்பி ,உலகம் அழியும் என நம்புகின்றவர்கள், முதலில் வாழ்வதற்கு தேவையான மழை பெற, மரக்கன்றுகளை நடுங்கள், என்பதை வலியுறுத்துகிறேன்,'' என்றார். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது, பிரசார பயணத்தை துவக்கி வைக்க வரும் வி.ஐ.பி.,க்கு,ஒரு மரக்கன்று கொடுத்து விடைபெறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக