சொல்கிறார்கள்
பெண் குழந்தைகளுக்காக, "பாதை' என்ற காப்பகத்தை நடத்தும், அமல் - சுனிதா: நாங்கள் சென்னைவாசிகள். நான் சிறு வயதிலேயே, படிக்கிற குழந்தைகளுக்கு, சின்ன சின்ன உதவி செய்தேன். வேலை பார்த்துக் கொண்டே, எம்.எஸ்.டபிள்யூ., முடித்தேன்.எங்களுக்குள்ளே, சமூகத்தின் மீதான, ஒரு தேடல் இருந்தது.நானும், சுனிதாவும் நண்பர்களாக இருந்த போது, 2002ல், "பாதை'யை துவங்கினோம். ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தால், இன்னும், "எபெக்டிவா' செய்யலாம் என்று தான், திருமணம் செய்து கொண்டோம்.ஆண் பிள்ளைகளுக்கு நிறைய ஹோம் இருந்தது. "பெண் குழந்தைகளுக்காக ஒரு இல்லம் துவங்கினால் என்ன?' என்று, இதைத் துவங்கினோம். தற்போது, 30 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். முடிந்த அளவுக்கு, குழந்தையை, பெற்றோரிடம் சேர்ப்பதற்கு, முயற்சி செய்வோம். அதற்கான வாய்ப்புகள் இல்லாத போது தான், நாங்கள் சேர்த்துக் கொள்வோம்.சைல்ட் ஹெல்ப், போலீஸ், தரமான தொண்டு நிறுவனங்கள் மூலமாக வருகிற, சரியான நபர்களைத் தான் எடுத்துக் கொள்கிறோம். இது போன்ற குழந்தைகளை, பள்ளி, கல்லூரியில் சேர்ப்பது, எளிதான காரியம் இல்லை. சிலருக்கு, பிறப்பு, ஜாதி சான்றிதழ்கள் இருக்காது. ஒவ்வொரு முறையும் போராடித் தான் பள்ளியில் சேர்க்கிறோம்.எங்கள் சேவையைப் பார்த்து, "ரோட்டரி கிளப்' இடம் கொடுத்தது; "வெலிங்டன் கார்ப்பரேட் பவுண்டேஷன்', பணம் கொடுத்தது. நண்பர்களின் ஒத்துழைப்பால், புதிய, "பாதை'க்கான இல்லம் உருவாகியது.இதுவரை, காப்பகத்தை நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால், இந்த சமூகத்திலிருந்து கிடைக்கிற, "பாசிட்டிவ் அப்ரோச்' தான் காரணம்.இந்த குழந்தைகளை, கருணையோடு பார்க்காமல், கல்வியும், உணவும் கொடுக்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. நியாயமான உணர்வுள்ள எந்த மனிதனாலும், இதை செய்ய முடியும்.
நே ர் முக அணுகுமுறையே காரணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக