சொல்கிறார்கள்
சுனாமியால் தளராத மனங்கள்!
கடந்த, நவம்பர், 27 முதல், டிசம்பர், 1 வரை நடந்த, முதல்வர் கோப்பைக்கு, 31 அணிகளோடு போட்டியிட்டோம். நம்பிக்கையோடு போராடினோம். கால் இறுதியில், எட்டு அணிகளை வென்று, அரையிறுதியில் மதுரை, திண்டுக்கல், திருச்சி என, மூன்றிலும் வென்றோம்.பைனலில், இந்துமதி என்ற பெண்ணிற்கு, அடிபட்டு வெளியேற, ஆளை மாற்ற, நடுவர் அனுமதிக்கவில்லை. 17 பேரோடு, கடுமையாக போராடி, அதிக கோல் வித்தியாசத்தில், முதல்வர் கோப்பையை ஜெயிச்சோம்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், எங்க அனைவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை தந்து பெருமைப்படுத்தினர். தங்களை கைவிட்ட உறவினர்கள் முன், இன்று, பிள்ளைகள், சாதித்துக் காட்டியுள்ளனர்
சுனாமியால் தளராத மனங்கள்!
முதல்வர் கோப்பை வென்ற, மகளிரணியின் பயிற்சியாளர் மாரியப்பன்: முதல்வர்
கோப்பை கால்பந்து போட்டியில், வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மகளிர் கால்பந்து
அணியின் பயிற்சியாளர் நான். 2005 முதல், கடலூர் மாவட்டத்தில், 53
மாணவியருக்கு, கால்பந்து பயிற்சியளிக்கிறேன்.இவர்களில், மூன்று பேர்,
இந்திய அணியிலும், நான்கு பேர், தமிழக அணியிலும், பங்கேற்று, மாநில மற்றும்
தேசிய அளவில், கால்பந்து விளையாடி வருகின்றனர்.பயிற்சி பெறும்
அனைவருக்கும், சின்ன வயதில் இருந்து கால்பந்து பயிற்சியும், விளையாட்டிற்கு
தேவையான சீருடைகள், பந்து, ஷூ, போக்குவரத்து செலவு என, அனைத்தையும்
வாங்கித் தருகிறேன்.
இதற்கு, ஆண்டிற்கு, 10 லட்சத்துக்கு மேல், செலவாகும்.தமிழக அரசு, கடலூர்
மாவட்டத்திற்கு தேர்வு செய்த அணியின், 18 பேரும், 2004ல் சுனாமியில்,
பெற்றோரை இழந்து, அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில்,
தங்கியிருந்தவர்கள். இவர்கள் அனைவரும், என்னை, "அப்பா' என்றே
அழைக்கின்றனர். நானும் மகள்களாக வளர்க்கிறேன்.பயிற்சி பெரும், 19 பேருக்கு,
கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியின் உரிமையாளர், அருட்தந்தை ரட்சகர்,
இலவசமாக, கல்வி, உணவு, தங்க விடுதி என, உதவினார். முனியாண்டி விலாஸ்
முதலாளி சீனிவாசன், தினமும் கால்பந்து பயிற்சியின் போது, ஆளுக்கு இரண்டு
அவித்த முட்டையும், மினரல் வாட்டர் பாட்டிலும் தருகிறார்.
கடந்த, நவம்பர், 27 முதல், டிசம்பர், 1 வரை நடந்த, முதல்வர் கோப்பைக்கு, 31 அணிகளோடு போட்டியிட்டோம். நம்பிக்கையோடு போராடினோம். கால் இறுதியில், எட்டு அணிகளை வென்று, அரையிறுதியில் மதுரை, திண்டுக்கல், திருச்சி என, மூன்றிலும் வென்றோம்.பைனலில், இந்துமதி என்ற பெண்ணிற்கு, அடிபட்டு வெளியேற, ஆளை மாற்ற, நடுவர் அனுமதிக்கவில்லை. 17 பேரோடு, கடுமையாக போராடி, அதிக கோல் வித்தியாசத்தில், முதல்வர் கோப்பையை ஜெயிச்சோம்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், எங்க அனைவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை தந்து பெருமைப்படுத்தினர். தங்களை கைவிட்ட உறவினர்கள் முன், இன்று, பிள்ளைகள், சாதித்துக் காட்டியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக