திங்கள், 17 டிசம்பர், 2012

மத்திய அரசுத் திட்டங்களா..? எல்லாம் நேரு குடும்பப் பெயர் மயம்தான்!

மத்திய அரசுத் திட்டங்களா..? எல்லாம் நேரு குடும்பப் பெயர் மயம்தான்!

மத்திய அரசின் சுமார் 60 திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில், பாதி திட்டங்களுக்கு மேல் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. நான்குக்கு மட்டுமே மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய திட்டமிடுதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் ரமேஷ் வர்மா இது தொடர்பான தகவல்கள் கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கு திட்டமிடுதல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்:
மத்திய அரசின் 58 திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன. இவற்றில், 16 திட்டங்களுக்கு ராஜீவ் காந்தியின் பெயரும், 8 திட்டங்களுக்கு இந்திரா காந்தியின் பெயரும், 3 திட்டங்களுக்கு நேருவின் பெயரும் சூட்டப்பட்டுள்ளன.
4 திட்டங்களுக்கு மட்டுமே மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காந்தி ஸ்ம்ரிதி மற்றும் காந்தி சமிதி, காந்தி ஷில்ப் பஜார், மகாத்மா காந்தி பங்கர் பீம போஜனா மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகிய நான்கு திட்டங்களுக்கு மட்டுமே காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாவின் பெயர் 1 திட்டத்துக்கும், பி.ஆர். அம்பேத்கரின் பெயர் 4 திட்டங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (3), லால் பகதூர் சாஸ்திரி (2), சர்தார் வல்லப பாய் படேல் (1), அடல் பிஹாரி வாஜ்பாய் (1), ரவீந்திரநாத் தாகூர் (1), ஜாகீர் ஹுசைன் (1) மற்றும் ஜெகஜீவன் ராம் (1) ஆகியோரது பெயர்களும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக