வியாழன், 20 டிசம்பர், 2012

இணைய வழி இசை

சொல்கிறார்கள்

"ஆன்-லைனில்'இசை!

"ஆன் - லைனில்' கர்நாடக இசை கற்றுத் தரும், வித்யா சுப்ரமணியன்: நான், "சார்ட்டட் அக்கவுன்ட்ஸ்'சில், தங்க பதக்கம் பெற்றவள். அமெரிக்க பாஸ்டன் கல்லூரியில், எம்.பி.ஏ., பட்டதாரி. இருந்தாலும், கர்நாடக இசையில் தனி ஆர்வம் உண்டு.

அமெரிக்க அரசின் பல கலை அமைப்பு களில் பரிசுகளும், கர்நாடக இசை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, விருதுகளும் பெற்றிருக்கிறேன்.இசை மீது இருந்த ஆர்வத்தால், கணவரோடு, இந்தியா திரும்பினேன். ஏழு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக இசையை, சில மாணவர் களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.ஆன்-லைன் மூலம், இசை கற்றுத் தர வசதி உள்ளதையும், அதற்கு ஏகப்பட்ட, "டிமாண்ட்' இருப்பதையும் அறிந்து, அத்தொழில் நுட்பத்தை கற்றேன். அதற்கு, எம்.பி.ஏ., படிப்பு உதவியது. கம்ப்யூட்டரில் இன்டர்நெட் மூலம், "ஸ்கைப் வைப்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, எலக்ட்ரானிக் முறையில் கற்பிக்கும் கருவி உதவியோடு, வீட்டிலிருந்தே இசையை கற்பிக்கிறேன்."ராக ரசிகா டாட். காம்' உருவாக்கி, கர்நாடக இசை பற்றிய தகவல்களை அளித்தேன். அதில், பல ரசிகர்கள் தங்கள் அனுபவத்தை தெரிவிக்கின்றனர்."குளோபல் கர்நாடிக் மியூசிக் லேர்னிங் அகடமி' யைத் துவக்கினேன். 200 மாணவ, மாணவியர், அமெ ரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரியா, நியுசிலாந்து என, உலகின் பல பகுதிகளிலிருந்தும், இசை யை கற்கின்றனர்.என்னிடம், 20 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை, ஆன்-லைனிலேயே சந்தித்து, தேவையான பயிற்சியளித்தேன். தொழில் நுட்பம் வளர்ந்தாலும், ஆசிரியருக்கு, "ஸ்பெஷலிஸ்ட் டெக்னிக்' தேவை.கர்நாடக இசையில் ஞானம் இருந்தாலும், எளிதில் புரியும்படி கற்றுத் தரும் திறமை வேண்டும். புரியாதவர்களுக்கு, விரிவான பாடத் திட்டம் தயாரித்து, அதற்கேற்ப பயிற்சியளிக்கிறோம். பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாகவும், மேடை பாடகர்களாகவும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக