வியாழன், 22 நவம்பர், 2012

நாடு எங்கே போகிறது? அரசு மருத்துவமனையில் வேள்வி


நாடு எங்கே    போகிறது?

மதுரை அரசு பொது மருத்துவ மனையில் வேள்வி(யாகம்)

First Published : 22 November 2012 11:12 AM IST
மதுரையில் டெங்கு காய்ச்சலால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுவதை அடுத்து, அரசு பொது மருத்துவமனையில் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் மதுரை மருத்துவமனையில் 44 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பல பீதியுடன் காலம் கழிக்கின்றனர். அவர்களின் மனச் சாந்திக்காகவும், அச்சத்தைப் போக்கவும் சில நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுப் புறத் தூய்மை, உடனடி மருத்துவ வசதிகள் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டும், உளவியல் ரீதியாக நோயாளிகளைத் தேற்றும் பொருட்டு இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 கருத்து:

  1. எதுக்கெல்லாம் பூசை செய்வது என்றே இல்லாமல் போய்விட்டது.

    "உளவியல் ரீதியாக நோயாளிகளைத் தேற்றும் பொருட்டு"

    அறிவியலை சொல்லிக்கொடுங்கள். மடமையை புகுத்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு