வெள்ளி, 5 அக்டோபர், 2012

இலங்கை த் தளபதியின் பேச்சு: இராமதாசு கண்டனம்

இலங்கை த் தளபதியின் பேச்சு: இராமதாசு கண்டனம்

First Published : 04 October 2012 04:17 PM IST
இலங்கை ராணுவ தளபதி மற்றும் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான ஜெகத் ஜெயசூர்யாவின் பேச்குக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறப்புப் படையைச் சேர்ந்த 45 உயரகாரிகள் டிசம்பர் மாதம் இந்தியாவில் பயிற்சி பெற வரவிருப்பதாகவும், முடிந்தால் தமிழக அரசியல்வாதிகள் அவர்களை தடுத்து நிறுத்தட்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத் ஜெயசூர்யா கூறினார்.
இது குறித்து இன்று கண்டன அறிக்கை அனுப்பியுள்ள ராமதாஸ், இலங்கைப் போரின் போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற ஜெயசூர்யா, அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை செய்த குற்றத்துக்காக போர்க் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒருவர், இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பேசத் துணிந்திருப்பதற்குக் காரணம் இலங்கை அரசுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுதான்.
இதைப் பார்க்கும்போது, இந்தியா ராஜபக்சேவின் காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறதா? என்ற வினா எழுகிறது. இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.
மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதே இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என மத்திய அரசு கருதினால், இந்த பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் பயிற்சி பெற வரும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக