மாணவரின் அலை பேசி
தொழில்நுட்ப ஆய்வுப் பணிக்குப் பரிசு
தினமணி By
dn, தாம்பரம்
First Published : 03 October 2012 02:16 AM IST
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான்
பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மொபைல் போன்
தொழில்நுட்பத்தில் இன்றைய வளர்ச்சி குறித்த தேசியக்கருத்தரங்கு
திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் அன்ட்ராய்ட் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் மூன்று வகை அதிநவீன செயல்பாடுகளை உருவாக்கிய மாணவர் பங்கஜ்குமார் மிஸ்ராவைப் பாராட்டி ரொக்கப்பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.
சாம்சங் மொபைல் கையாண்டுவரும் அன்ட்ராய்ட் தொழில்நுட்பச் செயல்பாடு முறைப்படி, அவசர உதவிக்காக அருகில் உள்ள காவல்நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட தகவல்களையும்,வாடிக்கையாளர் சேவை மூலம் செல்லும் இடங்கள் பற்றிய வரைபடத் தகவல்களும், வணிகச் சேவை மூலம் கூரியர் சேவை, ஓட்டல் சேவை உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மூன்று வகை செயல்பாடுகளை தனது ஆய்வின் மூலம் மாணவர் பங்கஜ்குமார் உருவாக்கி இருந்தார்.
கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பி.ஷேக்அப்துல் காதர், திரிசீ டெக்னாலஜீஸ் இயக்குநர் கோகுல் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக